• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • அமெரிக்கா : பெண் கிளாஸ்மேட்டை விரும்பியதற்காக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிறுமி! 

அமெரிக்கா : பெண் கிளாஸ்மேட்டை விரும்பியதற்காக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிறுமி! 

ஓவாசோவில் உள்ள Rejoice Christian Schoolல் படிக்கும் சிறுமி சோலியை (Chloe) மட்டுமல்ல, சிறுமியின் 5 வயது தம்பியும் இந்த சம்பவத்திற்குப் பிறகு பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

  • Share this:
அமெரிக்க மாநிலமான ஓக்லஹோமாவில் (US state of Oklahoma) ஒரே பாலின திருமணம் அக்டோபர் 6, 2014 முதல் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஓவாசோ நகரில் (city of Owasso) உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் எட்டு வயது சிறுமி, தனது வகுப்பைச் சேர்ந்த மற்றொரு சிறுமியிடம் தனக்கு 'ஈர்ப்பு' இருப்பதாகக் கூறியுள்ளார். இதை அறிந்த பள்ளி நிர்வாகம் அந்த சிறுமியை பள்ளியை விட்டு வெளியேற்றியுள்ளது. 'ஓவாசோவில் உள்ள Rejoice Christian Schoolல் படிக்கும் சிறுமி சோலியை (Chloe) மட்டுமல்ல, சிறுமியின் 5 வயது தம்பியும் இந்த சம்பவத்திற்குப் பிறகு பள்லியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த அதே நாளில் அவர்களது தாய் டெலானி ஷெல்டன் (Delanie Shelton) பள்ளிக்கு அழைக்கப்பட்டார். அப்போது சோலி தனக்கு இன்னொரு பெண் மாணவியின் மீது ஈர்ப்பு இருப்பதாக வெளிப்படுத்தினார். இந்த சம்பவம் குறித்து CNN இடம் பேசிய டெலானி, ``மற்றொரு பெண் மாணவியிடம் தனது 'க்ரஷை' பிளே கிரௌண்டில் வெளிப்படுத்திய பின்னர் சோலி, பிரின்சிபால் ஆபிஸிற்கு (Principal’s office) அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பள்ளியின் வைஸ் பிரின்சிபால் (Vice Principal) அவரிடம், ஒரு ஆணுடன் மட்டுமே பெண்கள் குழந்தைகளை பெற முடியும் என்று பைபிள் கூறுகிறது” என்று கூறினார். 

டெலானி பள்ளிக்கு வந்தபோது, வைஸ் பிரின்சிபால் சிறுமிகள் மற்ற சிறுமிகளை விரும்புவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். இதற்கு, டெலானி அதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்று கூறினார். இதன் பின்னர், ஷோல்டன் குடும்பத்தினருடனான (Shelton family) 'தங்கள் பார்ட்னர்ஷிப்பை முடிவுக்குக் கொண்டுவர' பள்ளி முடிவு செய்தது. இதனால் சோலி மற்றும் அவளது தம்பி என இருவரையும் பள்ளி நிர்வாகம் பள்ளியிலிருந்து வெளியேற்றியது.

இந்த சம்பவத்திற்குப் பிறகும் கடவுள் அவளை நேசிக்கிறாரா என்று தனது தாயிடம் கேள்வி எழுப்பிய சோலிக்கு இது பேரழிவை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில், டெலானி பள்ளி கண்காணிப்பாளர் ஜோயல் பெபினிடம் (school superintendent Joel Pepin) என்ன நடந்தது என்பதை அறிய ஒரு மீட்டிங்கை நடத்துமாறு கேட்டார். இருப்பினும், பள்ளி நிர்வாகம் அவரின் கோரிக்கையை மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக வெளியான தகவலின்படி, ப்ரைவசியை மேற்கோள் காட்டி இந்த சம்பவம் குறித்து பப்ளிக் கமெண்ட் தெரிவிக்க ஜோயல் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. சோலி பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, மற்றவர்கள் பள்ளியில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி பேச தொடங்கியுள்ளனர்.

ஒருமுறை Rejoice Christian Schoolல் படித்த கைலி ஹோல்டன் (Kylie Holden), அவரும் அவரது மற்ற நண்பர்களும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு விடுவோமோ என்ற அச்சுறுத்தலில் இருந்ததாகவும், எப்படியாவது ஸ்கூலிலிருந்து பாஸ் ஆகி வெளியே வந்தால் போதும் என்ற அளவிற்கு இருந்ததாகவும் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார். சோலிக்கு ஆதரவாக, 26 வயதான கைலி பேஸ்புக்கில் ஒரு போஸ்ட் செய்தார், அதில் சிறுமியின் குடும்பத்திற்கு ஆதரவை தெரிவிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். சோலியின் கதையைக் கேட்ட பலர் அவருக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

கடவுள் உட்பட பலரும் சிறுமியை நேசிப்பதாக சோலிக்கு தொடர்ந்து பல பாசிட்டிவ் குறுஞ்செய்திகளை பலரும் அனுப்பியுள்ளனர். ஒருவர் Homosexual/Bisexual ஆக இருப்பதாகக் கூறுவது பாலியல் ஒழுக்கக்கேடானது என்று Rejoice Christian Schoolன் ஹாண்ட் புக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இது பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான முக்கிய பாயிண்டாக இருக்கலாம். இருப்பினும், சோலியின் க்ரஷ் என்பது அந்த சிறுமியுடன்  விளையாடுவதை சோலி ரசிப்பதாக எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர அந்த சிறுமியுடன் "ஒரு உறவை மேற்கொள்ள விரும்புவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்று கூறினார். இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி இப்போது வேறொரு பள்ளியில் தனது படிப்பை மீண்டும் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: