ஹோம் /நியூஸ் /உலகம் /

ஹிஜாப் எதிர்ப்பு : ஈரானிய பெண்களுக்கு ஆதரவாக தலைமுடியை வெட்டிய பெண் எம்.பி

ஹிஜாப் எதிர்ப்பு : ஈரானிய பெண்களுக்கு ஆதரவாக தலைமுடியை வெட்டிய பெண் எம்.பி

சுவீடன் எம்.பி

சுவீடன் எம்.பி

ஈரானிய பெண்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய பாராளுமன்ற பெண் உறுபினர் தனது தலைமுடியை கத்தரித்து கொண்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • int, IndiaIranIranIran

  ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவிய நிலையில் போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு முயற்சித்து வருகிறது.

  பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஈரான் நாட்டில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக சுவீடன் எம்.பி. தனது தலைமுடியை வெட்டியுள்ளார்.

  ஈரானிய பெண்களுடனான தனது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற விவாதத்தின்போது ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் அபிர் அல் சஹ்லானி தனது தலைமுடியை கத்தரித்து கொண்டார்.

  Read More: உக்ரைன் போரை தீர்த்துவைக்க எலான் மஸ்க் போட்ட ட்வீட்.. ஆத்திரத்தில் உக்ரைன் மக்கள்!

  ஈரான் வம்சாவளியான அவர் ஐரோப்பிய ஒன்றிய விவாதத்தில் உரையாற்றியபோது, ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்கள் அனைவரும் ஈரானில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோருவதாக கூறினார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Hijab, Iran, Protest