"4 நாட்களாக சிறுநீரை குடித்தோம்" - வாட்ஸ்ஆப் புரளியால் குடும்பத்தை சிறுநீர் குடிக்க வைத்த பெண்

"4 நாட்களாக சிறுநீரை குடித்தோம்" - வாட்ஸ்ஆப் புரளியால் குடும்பத்தை சிறுநீர் குடிக்க வைத்த பெண்

கொரோனா

இங்கிலாந்தில் வாட்ஸ் ஆப் புரளியை உண்மையென நம்பி, கொரோனாவில் இருந்து விடுபடுவதற்கு 4 நாட்களாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறுநீர் குடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
இங்கிலாந்தில் வாட்ஸ் ஆப் புரளியை உண்மையென நம்பி, கொரோனாவில் இருந்து விடுபடுவதற்கு 4 நாட்களாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறுநீர் குடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்துக்கு இணையாக, வாட்ஸ் ஆப் புரளிகளும் உலகம் முழுவதும் இறக்கை கட்டி பறந்தன. இந்தப் புரளியையும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் நம்பியது இன்னும் வேடிக்கை. இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கொரோனாவைக் குணப்படுத்த, தான் மட்டுமல்லாது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் 4 நாட்களாக சிறுநீர் குடிக்க வைத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அவர், தனக்கு நண்பர் அனுப்பிய வாட்ஸ் ஆப் புரளியை உண்மையென நம்பி, குடும்ப உறப்பினர்களையும் சிறுநீர் குடிக்க வைத்துள்ளார்.

ஹெல்த்வாட்ச் சென்டரல் ஹெல்த் லண்டன் இதழில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. அதில், கொரோனா வைரஸைக் குணப்படுத்த விரும்பிய அந்தப் பெண், மருந்து, மாத்திரைகள் மற்றும் தடுப்பூசிகள் இல்லாத இயற்கையான வழிமுறைகளை தேடியுள்ளார். அந்த நேரத்தில் அந்த பெண்ணின் வாட்ஸ் ஆப்புக்கு நண்பர் ஒருவர் கொரோனாவில் இருந்து மீளும் வழிமுறை குறித்து குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கொரோனாவில் இருந்து இயற்கையான முறையில் விடுபட வேண்டுமென்றால், தங்களின் சிறுநீரை பிடித்து பருக வேண்டும் என இருந்துள்ளது. 

இதனை உண்மையென நம்பிய அந்தப் பெண்மணி, தான் மட்டுமல்லாது குடும்பத்தினர் அனைவரையும் 4 நாட்களாக சிறுநீர் அவர்களின் அருந்த வைத்துள்ளார். 4 நாட்களுக்குப் பிறகே அவர்களுக்கு புரிந்தது. தாங்கள் மேற்கொள்ளும் வழிமுறை பலனளிக்கவில்லை. அது புரளியாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். கொரோனா காலத்தில் பறந்த வாட்ஸ் ஆப் புரளிகள் குறித்து அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகம் (Cornell University) ஆய்வு ஒன்றை நடத்தி வெளியிட்டுள்ளது. அதில், கெரோனா குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் அதிகளவு புரளிகளை பரப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கார்னல் பல்கலைக்கழகம், உலகம் முழுவதும் உள்ள பிரபலமான ஆங்கில நாளிதழ்களில் வெளியான 38 மில்லியன் செய்திகளை 11 தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தினர்.  அறிவியலாளர் அந்தோனி பவுசி (Anthony Fauci) மீதான மர்ம தாக்குதல்கள் முதல் சீனா தொடுத்த பயோ வெப்பனாக (Bio Weapon) கொரோனாவை பரப்பியுள்ளது என்ற செய்திகள் வரை அனைத்தையும் ஆய்வுக்குழு தொகுத்துள்ளது. மற்ற 10 தலைப்புகளில் உள்ள செய்திகளைக் காட்டிலும் கொரானவை குணப்படுத்தும் என யூகங்களாக வெளியிட்டப்பட்ட செய்திகள் அதிகம் என தெரியவந்துள்ளது.  மிராக்கிள் கியூர்ஸ் (miracle cures) என்ற தலைப்பின் கீழ் 2,95,351 செய்திகள் வகைப்படுத்தப்பட்டதாக கார்னல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: