HOME»NEWS»INTERNATIONAL»a england women affected by rare disorder called prosopagnosia srs ghta
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பெண் - தனது முகத்தை கூட அடையாளம் காண முடியாத பரிதாபம்
இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் புரசோபக்னோசியா (prosopagnosia) என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், சொந்த முகத்தைக் கூட அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் புரசோபக்னோசியா (prosopagnosia) என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், சொந்த முகத்தைக் கூட அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
33 வயதான லாரன் நிக்கோலோ ஜோன்ஸ் என்பவர் இங்கிலாந்தின் டெர்பைஷைர் பகுதியில் வசித்து வருகிறார். அவர் மிகவும் அரிதினும் அரிதான நோய் எனக் கருதப்படக்கூடிய முக குருட்டுதன்மை அல்லது புரோசோபக்னோசியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது நோயின் தன்மை முற்றியுள்ளதால், அவரின் சொந்த முகத்தைக் கூட அடையாளம் காண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கல்யாண புகைப்படத்தில் தான் வெள்ளை நிற உடையை அணிந்திருந்ததால், அதனை வைத்து தன் முகத்தை அடையாளம் கண்டுகொள்வதாகவும், அந்த உடை இல்லையென்றால் நிச்சயமாக தன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாது என லாரன் தெரிவித்துள்ளார்.
சில சமயங்களில் கண்ணாடிகளில் தெரியும் அவருடைய உருவத்தைக் கூட அடையாளம் கண்டுக்கொள்ள முடியாமல், அந்த உருவம் வேறொருவடையது என நினைத்து பேசிக்கொண்டிருப்பதாகவும் லாரன் கூறியுள்ளார். ஒரு சில இடங்களில் வேறொருவருடைய புகைப்படத்தைப் பார்த்து அந்த உருவம் தன்னுடையது என நினைத்து வியந்துள்ளதாவும், பின்னர் அருகில் சென்று பார்க்கும்போது அந்த உருவம் தான் இல்லை என்பதை உணர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தன்னுடைய உருவம் அடையாளம் காணமுடியாத நிலையில் இருந்த அவர், தற்போது தன்னுடைய நண்பர்களின் முகத்தையும் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளார்.
நோயின் தன்மை முற்றியுள்ளதால் நண்பர்கள், பிரபலங்கள், புகைப்படங்கள் என எதையும் சரியாக கூற முடியாத நிலையில் இருக்கும் அவர், அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் குரல், நடை உடை பாவனைகளை வைத்து அடையாளம் கண்டுவருகிறார். தன்னுடைய குணாதிசயம் குறித்து பேசிய லாரன், தன்னுடைய நெருங்கிய தோழி கட்டிப்பிடித்தப்போது கூட என்னால் அவர் யார் என கூற முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். அவருடைய வாழ்க்கையில் இதுபோன்ற மேலும் சில துயரமான நிகழ்வுகளும் நடந்துள்ளதாக லாரன் கூறியுள்ளார். தன்னுடைய முன்னாள் காதலர் என்று நினைத்து வேறொருவருடன் 40 நிமிடங்களுக்கு மேலாக பேசிக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், திரைப்படங்கள் பார்ப்பபதிலும் தனக்கு சிக்கல் இருப்பதாக தெரிவித்துள்ள லாரன், புத்தகங்களை வாசிப்பதை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
19 வயதில் இருந்தே தனக்கு இந்தப் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ள அவர், தனக்கு ஏற்பட்ட அதேநோயால் பாதிக்கப்பட்ட நரம்பியல் நிபுணர் ஆலிவர் சாக்ஸ் எழுதிய புத்தகத்தைப் படித்து தனக்கு ஏற்பட்ட நோயினை இனம் கண்டுகொண்டதாக தெரிவித்தார். மூளையின் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளினால் இதுபோன்ற அரியவகை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கணவர் மற்றும் அவருடன் நாள்தோறும் தொடர்பில் இருக்கும் ஒருசிலரை மட்டும் எளிதாக அடையாளம் கண்டுகொள்கிறார்.