ஹோம் /நியூஸ் /உலகம் /

9 மணி நேரம்; 127 கி.மீ தூரப் பயணம்! மானின் உருவப் பாதையில் சைக்கிள் ஓட்டிய 51 வயது இளைஞர்

9 மணி நேரம்; 127 கி.மீ தூரப் பயணம்! மானின் உருவப் பாதையில் சைக்கிள் ஓட்டிய 51 வயது இளைஞர்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

லண்டனைச் சேர்ந்த அந்தோனி ஹோய்டி என்பவர் கூகுள் மேப்பில் பார்த்தால் மான் உருவம் ஓவியம் போல தெரியும் வகையிலான பாதைகளில் மிதிவண்டி ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

உலகம் முழுவதும் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படவுள்ளது. அதற்காக, உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போதே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. அந்தக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக 51 வயதான அந்தோனி ஹோய்டி என்பவர் மிதிவண்டி ஓட்டி சாதனை படைத்துள்ளார். அவர், மிதிவண்டி ஓட்டிய பாதைகளை கூகுள் மேப் மூலம் பார்க்கும்போது மானின் உருவம் அழகாக தெரியும். அந்த வகையில் பாதைகளைத் தேர்வு செய்து அவர் மிதிவண்டியை ஓட்டியுள்ளார்.

அவர், லண்டனின் ஹேமர்ஸ்மித் பகுதியில் மிதிவண்டி ஓட்டத் தொடங்கிய அவர், கிழக்கு லண்டன் பகுதி முழுவதும் சென்று யூஸ்டோன் சென்று முடித்தார். அதற்காக, 9 மணி நேரத்தில் 79 மைல்கள் அதாவது 127 கி.மீ தூரம் மிதிவண்டியில் சென்றுள்ளார். மானின் உருவத்தில் வரவேண்டும் என்பதற்காக மிகவும் சிக்கலான பாதைகளில் எல்லாம் மிதிவண்டி ஓட்டியுள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், ‘நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது எல்லாவற்றையும் நீங்கள் திட்டமிடலாம். ஆனால், அதனை முழுவதுமாக முடிக்கும் வரையில் அது சரியாக வருமா? வரதா? என்ற பயம் இருந்துகொண்டே இருக்கும்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: