ஹோம் /நியூஸ் /உலகம் /

பிறந்த குழந்தைக்கு ஏசியன் கேம்ஸ் என்று பெயரிட்ட தம்பதியர்

பிறந்த குழந்தைக்கு ஏசியன் கேம்ஸ் என்று பெயரிட்ட தம்பதியர்

 அபிடா ஏசியன் கேம்ஸ் என்று பெயரிடப்பட்ட குழந்தை

அபிடா ஏசியன் கேம்ஸ் என்று பெயரிடப்பட்ட குழந்தை

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஆசிய போட்டிகள் ஆரம்பித்தன்று இந்தோனேசியாவில் பிறந்த குழந்தைக்கு அபிடா ஏசியன் கேம்ஸ் என்று அந்த குழந்தையின் பெற்றோர்கள் பெயர் வைத்து மகிழ்ந்தனர். 

  இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள்  தொடர்ந்து 6 நாட்களாக நடைபெற்று வருகிறது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய போட்டி தொடரான ஆசிய விளையாட்டு போட்டியை இந்தோனேஷியா மக்கள் மிகவும் மகிழ்ச்சியோடு வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

  கடந்த சனிக்கிழமை 18-ம் தேதி போட்டி தொடங்கியபோது  பலெம்பாங்கில் உள்ள தம்பதியினருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆசிய போட்டியை நினைவூட்டும் வகையில் அபிடா ஏசியன் கேம்ஸ் என பெயரிட்டுள்ளனர்.

  ஏற்கனவே இரண்டு குழந்தைக்கு தந்தையான யோர்டானியா டென்னி, 3-வது குழந்தைக்கு அபிடா ஏசியன் கேம்ஸ் என பெயர் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 4 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஆசிய போட்டி இனிமேல் பாலெம்பாங்கில் எப்போது நடைபேறும் என்று தெரியாது என்றும் இது ஒரு அரிதான நிகழ்வு என்றார். அதனால்தான் தனது குழந்தைக்கு அபிடா ஏசியன் கேம்ஸ் என பெயர் வைத்ததாக  கூறினார்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Asian Games 2018