அதிபராக நடித்த காமெடி நடிகர்... நிஜவாழ்விலும் அதிபரான ஆச்சரியம்..!

டிவி தொடரில் காட்டப்பட்டது போலவே ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி கொடுத்து இத்தேர்தலை வென்றுள்ளார் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி.

Web Desk | news18
Updated: April 22, 2019, 7:02 PM IST
அதிபராக நடித்த காமெடி நடிகர்... நிஜவாழ்விலும் அதிபரான ஆச்சரியம்..!
வோலோடிமிர் (Image Credits: Reuters)
Web Desk | news18
Updated: April 22, 2019, 7:02 PM IST
டிவி நிகழ்ச்சியில் காமெடியன் ஆக நடித்த உக்ரைனைச் சேர்ந்த வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று உக்ரைனின் அதிபராக வெற்றி பெற்றுள்ளார்.

'Servant of the People' என்ற உக்ரைன் டிவி தொடரில் காமெடியன் வேடத்தில் நடித்தவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி. அந்த டிவி தொடரில் அவர் எதேர்ச்சையாக உக்ரைனின் அதிபர் ஆகிவிடுவது போல் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும்.

இதுபோல், எதேர்ச்சையாக இல்லாமல் உக்ரைனின் அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பெட்ரோ போரோஷென்கோ என்பவரைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். அரசியலில் புதிதாக நுழைந்தபோதும் மக்களைக் கவர்ந்த அரசியல்வாதியாக தற்போது அதிபர் தேர்தலையும் வென்றுள்ளார் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி.


டிவி தொடரில் காட்டப்பட்டது போலவே தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலமாகவே பிரசாரம் செய்து தொடரில் காட்டப்பட்டது போலவே ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி கொடுத்து இத்தேர்தலை வென்றுள்ளார் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி.

இதுகுறித்து நெட்டிசன்கள், ‘உக்ரைனில் ஒரு காமெடியனை அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்ததாக உக்ரைனில் தான் ஒரு காமெடியனுக்கு அதிபர் பதவி கிடைத்துள்ளது’ என சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர்.

மேலும் பார்க்க: பொது அமைதியை குலைக்கும் வாட்ஸ்அப் தகவலை பரப்புகிறீர்களா...? குண்டர் சட்டம் பாயும்..!

Loading...

First published: April 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...