ஹோம் /நியூஸ் /உலகம் /

இங்கிலாந்தின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு!

இங்கிலாந்தின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு!

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் படைத்த நாணயம்

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் படைத்த நாணயம்

இங்கிலாந்தின் மன்னராக மூன்றாம் சார்லஸ்யின் உருவம் படைத்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, IndiaUnited Kingdom of EnglandUnited Kingdom of England

  இங்கிலாந்தின் மன்னராக மூன்றாம் சார்லஸ் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இரண்டாம் ராணி எலிசபெத்தின் உருவம் பதித்த நாணயம் மாற்றப்பட்டு தற்போது மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பதித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

  இங்கிலாந்து நீண்ட கால ராணியாக இருந்த ராணி எலிசபெத் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி தனது 96 வயதில் காலமானர். அதனைத் தொடர்ந்து அவரின் மகன் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக மூன்றாம் சார்லஸ் மன்னராகப் பதவியேற்றார். இதனையடுத்து ராணியின் உருவம் பதித்த நாணயம், பண நோட்டுகள், அஞ்சல் தபால்கள், முத்திரைகள் போன்றவற்றை மாற்றி அமைக்கப்படவேண்டி இருந்தது. அந்த வகையில் பிரிட்டனின் ராயல் மிண்ட் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தின் வடிவத்தை வெள்ளிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

  அதில் 5 பவுண்ட் மற்றும் 50 பென்ஸ் ஆகிய இரண்டு நாணயங்கள் இடம்பெற்றுள்ளது. மன்னரின் உருவம் படம் எலிசபெத் ராணிக்கு இருந்ததது போலவே வலதுபுறம் இன்றி இடது புறம் பார்ப்பது போல் பொறிக்கப்பட்டுள்ளது.

  Also Read : கால்பந்து போட்டியில் தோல்வி.. ரசிகர்கள் ஆத்திரத்தால் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழப்பு!

  மேலும் லத்தின் மொழியில் கிங் சார்லஸ் III, கடவுளின் அருளால், நம்பிக்கையின் பாதுகாவலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் மன்னர் சார்லஸின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் வரத் தொடங்கும் என்று ராயல் மின்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது இங்கிலாந்தில் இரண்டாம் எலிசபெத் ராணியின் உருவம் பதித்த சுமார் 27 பில்லியன் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் எனவும் கொஞ்சம் கொஞ்சமாக புதிய நாணயங்கள் அவற்றை மாற்றி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: Britain, Queen Elizabeth