நூறு கோடி மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கிறார்கள்: இன்று உலக தண்ணீர் தினம்!

ஹாலிவுட் படங்களில் வருவது போல, வேற்று கிரகங்களில் நம்மால், எளிதில் விண்கலம் ஏறிச் சென்று வாழமுடியாது.

news18
Updated: March 22, 2019, 8:14 AM IST
நூறு கோடி மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கிறார்கள்: இன்று உலக தண்ணீர் தினம்!
தண்ணீர் மாதிரி படம்
news18
Updated: March 22, 2019, 8:14 AM IST
இன்று உலக தண்ணீர் தினம். உலகம் இயற்கை சார்ந்து அதிகம் இருந்த காலத்திலேயே தண்ணீரின் தேவை அறிந்து “நீரின்றி அமையாது உலகு” என வள்ளுவர் கூறியுள்ளார்.

இன்றோ நவீன மயமாக்குதல் பெயரில், உலகின் இயற்கை வளங்களை 90 சதவீதம் அழித்துவிட்டு, தண்ணீரை செவ்வாய் கிரகத்தில் தேடிக் கொண்டு இருக்கிறான் மனிதன்.

நீர் சூழ் உலகாக மூன்று பங்கு கடல் இருந்தும், அதனை குடிநீராக்கும் விஞ்ஞானத்தை விடுத்து, ஏலியன்களை தேடியே நம் அறிவியல் எல்லாம் வர்த்தகமயமாக்கப்பட்டு வருவதால், மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை தேவைகளுக்கான கண்டுபிடிப்புகள் கிடப்பில் போடப்பட்டு வருகின்றன.

பிளாஸ்டிக்கின் எதிர்வினை அறியாது, கோடிக் கணக்கான டன்கள் தயாரித்து, இன்று ஆழ்கடலுக்கு சென்று பிளாஸ்டிக் கழிவுகளை அள்ளி வருகிறோம்.

கிணறுகள், குளங்களை மூடிவிட்டு, ஸ்விம்மிங் பூலில் நீச்சல் அடிக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில், விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் தான் நீச்சலடிக்க முடியும்.

உலகளவில் அன்றாட தேவைக்கான சுத்தமான குடிநீர் இல்லாமல், 400 கோடி மக்கள் திண்டாடுவதாகவும், இந்தியாவில் சுமார் 100 கோடி மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், இதில், 60 கோடி மக்கள் அதிக வறட்சியான நிலங்களில் வசிப்பதாகவும் wateraid நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு போதிய பருவ மழை பெய்யவில்லை. உலகம் முழுவதும் இயற்கையை அழித்ததன் விளைவாக, பருவநிலை மாற்றம் ஏற்பட்டு உலகம் வேகமாக வெப்பமயமாகி வருகிறது.
Loading...
ஹாலிவுட் படங்களில் வருவது போல, வேற்று கிரகங்களில் நம்மால், எளிதில் விண்கலம் ஏறிச்சென்று வாழமுடியாது.

இந்த உலகம் ஒன்று தான். உலகில் வாழ நீர் வேண்டும். தண்ணீரை தேவை இல்லாமல் வீணாக்கவேண்டாம். ஷவர்களை குறைத்துக்கொள்வோம். சிறு துளி பெருவெள்ளம்!

Also See..

First published: March 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...