ஹோம் /நியூஸ் /உலகம் /

பிப்-22ம் தேதி பூமிக்கு மிக அருகில் பறக்கவுள்ள அபாயகரமான சிறுகோள்... அளவில் ஸ்டாச்சு ஆப் லிபர்ட்டி-யை விட இருமடங்கு பெரியது

பிப்-22ம் தேதி பூமிக்கு மிக அருகில் பறக்கவுள்ள அபாயகரமான சிறுகோள்... அளவில் ஸ்டாச்சு ஆப் லிபர்ட்டி-யை விட இருமடங்கு பெரியது

தற்போது, 2020 XU6 என்ற ஒரு சிறுகோள் பூமியை நோக்கி நகரத்து வருவதாகவும், இந்த கோள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பிப்ரவரி 22-ம் தேதி அன்று நடக்க இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பூமியைக் கடந்த விண்கற்கள் பற்றி பல அறிக்கைகள் கடந்த 2020-ம் ஆண்டில் வெளியாகியுள்ளன. மேலும் சிறுகோள்கள் என்று அழைக்கக்கூடிய பல விண்வெளி பாறைகள் இந்த ஆண்டிலும் நமது கிரகத்திற்கு மிக நெருக்கமாக பறக்க இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, 2020 XU6 என்ற ஒரு சிறுகோள் பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இந்த கோள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பிப்ரவரி 22-ம் தேதி அன்று நடக்க இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்

இதுதொடர்பாக Daily Express-ல் வெளியான அறிக்கையின்படி, இந்த சிறுகோள் 213 மீட்டர் நீளம் கொண்டதாகும். இது நியூயார்க்கில் அமைந்துள்ள ஸ்டாச்சு ஆப் லிபர்ட்டி சிலையை (93 மீட்டர்விட இரண்டு மடங்கு பெரியது. இது தற்போது சூரிய குடும்பத்தின் வழியாக ஒரு மணி நேரத்திற்கு 30,240 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதாவது வெறும் ஒரு மணி நேரத்தில் பூமியைச் சுற்றி வரும் அளவுக்கு இதன் வேகம் இருக்கிறது.

நாசா, இந்த 2020 XU6 என்ற சிறுகோளை ‘Near Earth Object' என்று வர்ணித்துள்ளது. மேலும் இதை அபாயகரமானவை என்றும் அழைத்துள்ளது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக இந்த சிறுகோள் பறக்கும் போது நமது பூமியைத் தாக்கும் என்று அச்சப்படத் தேவையில்லை என நாசா குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து நாசா தனது ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி (JPL) இணையதளத்தில், “பூமிக்கு மிக அருகில் பறக்கும் பொருட்கள் என்றால் அது வால்மீன்கள் மற்றும் சிறுகோள்கள் தான். அவை அருகிலுள்ள கிரகங்களின் ஈர்ப்பால் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைய முற்படுகின்றன.

வால்மீன்கள் மற்றும் விண்கற்கள் மீதான விஞ்ஞான ஆர்வத்திற்கு பெரும்பாலும் அவற்றின் நிலையே காரணமாக அமைகின்றன. ஏனெனில் இவை சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பத்தை உருவாக்கும் செயல்முறையிலிருந்து வெளியான மீதமுள்ள துண்டுகள் என்பதால் அதன் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது’ என தெரிவித்துள்ளதுகோடிக்கணக்கான வால்மீன்களின் தொகுப்பிலிருந்து உருவான மாபெரும் கிரகங்கள் தான் வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை. இவற்றின் உருவாக்க செயல்முறையிலிருந்து வெளியான மீதமுள்ள துண்டுகள் தான் இன்று நாம் காணும் வால்மீன்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.

சிறுகோள்கள்:

ஒரு சிறுகோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம் ஆகும். தற்போது சூரியனைச் சுற்றிவரும் மில்லியன்கணக்கான சிறுகோள்கள் இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகளுக்கு இடையிலான பகுதியில் காணப்படுகின்றன. அவை ஒரே அளவிலும் வடிவத்திலும் இருப்பதில்லை. ஏனெனில் அவை சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. ஆனால் சிலவற்றில் களிமண் அல்லது உலோகம், நிக்கல் மற்றும் இரும்பு போன்றவை உள்ளன. அவை பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Asteroid