ஹோம் /நியூஸ் /உலகம் /

99 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் போன்ற புதிய வகை பல்லி இனம் கண்டுபிடிப்பு!

99 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் போன்ற புதிய வகை பல்லி இனம் கண்டுபிடிப்பு!

டைனோசர் - Image

டைனோசர் - Image

இந்த புதைப்படிவம் தொடக்கத்தில் ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் இது ஒரு பல்லி என்றால் இப்போது உள்ள இனங்களை அவை ஒத்திருக்கிவில்லை. அது மிகவும் அசாதாரணமானது

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

சுமார் 99 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டு புதைப்படிவங்கள் மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புகள் மூலம் இது ஒரு புதிய வகை பல்லியினமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

நாகா இன மக்களுக்குப் பிறகு இந்த புதைப்படிவங்கள் ஒகுலுடென்டாவிஸ் நாகா (ஓ. நாகா) என்று பெயரிடப்பட்ட புதிய இனங்கள் ஆகும். இவை ஒகுலுடென்டாவிஸ் கவுங்ரே போன்ற இனத்தைச் சேர்ந்தவை. அதாவது முன்னர் அறியப்பட்ட மிகச்சிறிய பறவை அல்லது டைனோசர் என்று கருதப்படும் ஒரு இனம் ஆகும்.

இந்த இரண்டு புதிய மாதிரிகளில், தாடை எலும்புகளுடன் இணைக்கப்பட்ட பற்கள் மற்றும் அம்பரில் பாதுகாக்கப்பட்ட மென்மையான திசுக்கள் மூலம் இதன் முக்கிய உடல் பண்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அதன் உதவியோடு அவை புதிய வகை பல்லி இனமாக இருக்கலாம் என்று அடையாளம் கண்டனர். இதுகுறித்து, ஸ்பெயினின் இன்ஸ்டிட்யூட் கேடலே டி பேலியோண்டோலோஜியா மைக்கேல் க்ரூசாஃபோன்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஆய்வின் முன்னணி ஆராய்ச்சியாளர் அர்னாவ் போலட் கூறியதாவது, "இந்த புதைப்படிவம் தொடக்கத்தில் ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் இது ஒரு பல்லி என்றால் இப்போது உள்ள இனங்களை அவை ஒத்திருக்கிவில்லை. அது மிகவும் அசாதாரணமானது" என்று கூறினார்.

Also Read:    ‘மருத்துவ கட்டிப்பிடித்தல்’ தொழிலின் அனுபவங்களை பகிர்ந்த ஆச்சரியப் பெண்மணி: ஒரு மணி நேரத்திற்கு ரூ.7300 வசூலிக்கிறாராம்!

இந்த பாலியான்டாலஜிஸ்டுகளை சி.டி ஸ்கேன் செய்து தரவுகளை ஆராய்ந்த பின்னர், மர்ம விலங்கு செதில்களைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர். பற்கள் நேரடியாக தாடை எலும்புடன் இணைக்கப்பட்டிருந்தன. பொதுவாக டைனோசர்களின் பற்கள் ஒரு சாக்கெட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். தாடை எலும்புடன் அல்ல. எனவே இந்த புதைப்படிவங்கள் டைனோசர் இனத்தை முழுவதுமாக பிரதிபலிக்கவில்லை. மேலும் இதன் கண் அமைப்பு மற்றும் பல்லிகளைப் போன்ற தோள்பட்டை எலும்புகள் மற்றும் ஹாக்கி குச்சி வடிவ மண்டை எலும்பு ஆகியவை தாடை எலும்புடன் இணைக்கப்பட்ட பற்களைக் கொண்ட ஊர்வன இனத்தோடு ஒத்துப்போவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.

Also Read:   ‘மருத்துவ கட்டிப்பிடித்தல்’ தொழிலின் அனுபவங்களை பகிர்ந்த ஆச்சரியப் பெண்மணி: ஒரு மணி நேரத்திற்கு ரூ.7300 வசூலிக்கிறாராம்!

இது குறித்து போலெட் மேலும் கூறியதாவது, " கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு மாதிரிகளும் ஒக்குலுடென்டாவிஸைச் சேர்ந்தவை என்று நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் அவற்றில் உள்ள பல வேறுபாடுகள் அவை தனி இனங்களைக் குறிக்கின்றன" என்று தெரிவித்தார். இந்த சமீபத்திய ஆராய்ச்சி Current Biology இதழில் ஜூன் 14ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதேபோல மார்ச் 2020 இல் நேச்சரில் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், விஞ்ஞானிகள் ஓ. கவுங்ரேவை ஹம்மிங் பறவை அளவிலான டைனோசர்களாக அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் 2020 மே மாதத்தில் அந்த ஆராய்ச்சி தொடர்பான அறிக்கையை திரும்பப் பெற்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டு மாதிரிகளை பாதுகாப்பாக எடுத்து வைக்கும் போது அவை சிதைய ஆரம்பித்தது என்பதையும் விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்தது. மியான்மரில் ரத்தினவியலாளர் அடோல்ஃப் பெரெட்டியால் வாங்கப்பட்ட இந்த புதைபடிவ சேகரிப்பைப் பற்றி படிக்கும் போது இந்த மாதிரியை முதன்முதலில் பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கவனித்தது தெரியவந்தது. மியான்மரில் அம்பர் சுரங்கமும் விற்பனையும் நாட்டில் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டுள்ளதால், சொசைட்டி ஃபார் வெர்டிபாரெட் பாலியான்டாலஜி அமைத்த நெறிமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த புதைப்படிவம் விற்கப்பட்டது என்று புளோரிடா இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் செய்தி வெளியிட்டது.

First published: