அடால்ஃப் ஹிட்லரின் நாஜி வதை முகாம் கமாண்டரிடம் பணியாற்றிய பெண் ஒருவர் 10,500 கொலைகளில் உடந்தையாக இருந்ததை நீதிமன்றம் உறுதி செய்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போர் குற்றங்களுக்கான விசாரணை 2011 முதல் நடந்து அவ்வப்போது தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் கடைசி வழக்காக ஜெர்மனியின் ஸ்டுட்ஹாஃப் நகரில் இருந்த நாஜி வதை முகாமில் தனது பதின்ம வயதில் 1943 முதல் 1945 வரை தட்டச்சராக பணிபுரிந்த 97 வயதான இம்கார்ட் ஃபியூஷ்னர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது.
இரண்டாம் உலக போரின்போது நாஜி படைகள் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தது. இன்றைய போலந்தில் உள்ள க்டான்ஸ்க் அருகே உள்ள ஸ்டட்ஹோஃப் என்ற இடத்தில் உள்ள எரிவாயு அறையில் சுமார் 65,000 பேர் பட்டினி மற்றும் நோயினால் இறந்தனர். அவர்களில் போர்க் கைதிகள் மற்றும் நாஜிகளின் அழிவுப் பிரச்சாரத்தில் சிக்கிய யூதர்களும் அடங்குவர்.
இதையும் படிங்க:தேயிலை நகரத்தில் நடக்கும் தேஹிங் பட்காய் திருவிழா.. அசாம் டிரிப் அடிக்க ரெடியா..
அதில் 11,412 பேரின் கொலைகளுக்கு உதவியதாக ஃபர்ச்னர் மீது குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டது. குற்றங்கள் நடந்தபோது அவர் 18 முதல் 19 வயதுக்குள் இருந்ததால் சிறார் சட்டத்தின் கீழ் அவருக்கு 2 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த சில தசாப்தங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதல் பெண் இவர்தான். 2021-ம் ஆண்டு செப்டம்பரில் விசாரணை தொடங்கிய போது, ஓய்வுக்கால இல்லத்தில் இருந்து தப்பிவிட்ட இம்கார்ட் ஃபியூஷ்னரை ஹம்பர்க் நகர தெருவில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
விசாரணைக்கு வந்த மூதாட்டி 40 நாட்களாக மௌனம் காத்துள்ளார். பின்னர் பேசிய அவர்,"ஸ்டுட்ஹாஃப் வதை முகாமில் அந்த நேரத்தில் இருந்தமைக்காக வருந்துகிறேன். நடந்த சம்பவதிற்கு நான் மிகவும் வருந்துகிறேன். இப்போதைக்கு இதை மட்டும் தான் என்னால் கூற முடியும்" என்றார்.
ஆனால் அந்த ஹோப்பெயின் அலுவலகத்தில் பணிபுரிந்த பல தட்டச்சர்களுள் ஃபியூஷ்னரும் ஒருவர் என்பதால், அவருக்கு என்ன தெரியும் என்பது குறித்த சந்தேகங்கள் இருப்பதை கருத்தில் கொண்டு இம்கார்ட் ஃபியூஷ்னரை விடுவிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
ஆனால், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஹிட்லரின் எஸ்.எஸ். படைப் பிரிவுத் தலைவராக பணிபுரிந்த ஹெய்ன்ஸ் ஃபுர்ஷிஸ்டம் என்பரை அவர் மணம் புரிந்து, வடக்கு ஜெர்மனியில் உள்ள சிறிய நகரில் அரசு அலுவலராக அவர் பணிபுரிந்தார். பின்னர் அவரது கணவர் 1972-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.
இதையும் படிங்க: பெண்ணிடம் ஆபாச பேச்சு.. வெளியான ஆடியோ க்ளிப்- புதிய சர்ச்சையில் சிக்கிய இம்ரான் கான்!
இரண்டாம் உலகப்போரின் போது சிறுவனாக இருந்த ஜோசஃப் சாலமோனோவிச் நீதிமன்றத்தில் சாட்சி கூறியுள்ளார். 1944-ம் ஆண்டு அவரது தந்தை விஷ ஊசி செலுத்தி கொல்லப்படும் போது அலுவலகத்தில் வெறுமனே அமர்ந்து கொண்டு, இறப்புச் சான்றிதழ் மீது முத்திரை இடுபவராக இருந்தாலும் கூட அங்கு நடந்த குற்றங்களில் இம்கார்ட் ஃபியூஷ்னருக்கு மறைமுகமாக தொடர்பு உண்டு என்று குறிப்பிட்டார்.
காலம் கடந்தாலும் அப்போது நடந்த அக்கொடூர செயலுக்கு தண்டனை தர வேண்டும் என்று நீதிபதிகள் உறுதியாக இருந்ததாலும் குற்றம் சாட்டப்படுபவர் தற்போது 90 வயதைத் தாண்டியதால் தொடர்ச்சியாக சிறையில் இருக்க முடியாது. அதனால் 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Murder case