96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா, 12 நாடுகளில் டெல்டா பிளஸ் பரவல்- WHO

உலகச் சுகாதார அமைப்பு (WHO)

இந்தியாவில் 2-ம் அலையில் பெரிய அழிவுகளை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா உருமாறிய வைரஸ் 96 நாடுகளில் பரவியுள்ளது, அதே போல் டெல்டா பிளஸ் வகை கொரோனா 12 நாடுகளில் பரவியுள்ளது தெரியவந்துள்ளதாக உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

  • Share this:
    கொரோனா பரவல் குறித்து ஜூன் 21 - 27ம் தேதி வரையிலான வாராந்திர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:டெல்டா வகை வைரஸ் தற்போது 96 நாடுகளுக்கு பரவியுள்ளது. இது மிக வேகமாக பல நாடுகளுக்கு பரவி வருவதால் வரும் மாதங்களில் அனைத்து வகை வைரஸ்களில் டெல்டா வகையின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

    சமூக இடைவெளி முக கவசம் என தற்போதுள்ள பாதுகாப்பு முறை சிறப்பானதாக உள்ளதால் அதையே தொடர வேண்டும். பல நாடுகளில் தடுப்பூசி வழங்கும் பணி மந்தமாக உள்ளது அல்லது தடுப்பூசியே வழங்கப்படாமல் உள்ளது. அதனால் அந்த நாடுகளில் வைரஸ் பாதிப்பு நீண்ட காலம் இருக்கும்.

    Also Read: பயங்கர வெப்ப அலை: கனடா, அமெரிக்காவில் 100-க்கும் மேற்பட்டோர் பலி

    கொரோனா வகைமாதிரிகள் குறித்து ஆய்வு செய்ய பல நாடுகளில் போதிய வசதி இல்லை. அதனால் டெல்டா வகை வைரஸ் பரவல் அதிக நாடுகளில் இருக்கலாம் என அஞ்சுகிறோம்.தற்போதைய நிலையில் 'ஆல்பா' வகை கொரோனா வைரஸ் 172 நாடுகளில் பரவியுள்ளது. 'பீட்டா' வகை வைரஸ் 120 நாடுகளிலும் 'காமா' வகை வைரஸ் 72 நாடுகளிலும் பரவியுள்ளது.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெல்டா வகை வைரஸ் மேலும் 12 நாடுகளுக்கு பரவியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

     

    Also Read: அன்னிய சக்திகள் சீண்டினால் அவர்கள்  சீனப்பெருஞ்சுவரில் மோதி தகர்க்கப்படுவார்கள்: சீன அதிபர் ஜின்பிங் ஆவேசம்

    எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா கூறும்போது, “டெல்டா பிளஸ்' வகை கொரோனா வைரஸ் பரவல் தற்போது அதிகரித்துள்ளது. இதுவரை 12 நாடுகளில் அது தென்பட்டுள்ளது. நம் நாட்டில் தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் இதன் பாதிப்பு பதிவாகியுள்ளது.இது குறித்து எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளதாவது:

    டெல்டா பிளஸ் வகை வைரஸ் தொடர்பாக போதிய புள்ளி விபரங்கள் தகவல்கள் நம்மிடம் இல்லை. அதனால் இந்த வைரசால் அதிக பலி ஏற்படுமா என்பதை தற்போதைக்கு கூற முடியாது.தடுப்பூசிகளை கலந்து கொடுப்பதால் அதிக பலன் கிடைப்பதாக கூறுகின்றனர்; ஆனால் அதை நிரூபிக்க போதிய தகவல்கள் இல்லை” என்றார்.
    Published by:Muthukumar
    First published: