HOME»NEWS»INTERNATIONAL»90 years old women walks six miles to get corona vaccine in snow at america srs ghta

உறைபனியையும் பொருட்படுத்தாமல் 6 மைல் தூரம் நடந்துசென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 90 வயது மூதாட்டி..

அமெரிக்காவின் சியாட்டி பகுதியில் குளிர்கால புயல் காரணமாக ஒரு அடிக்கு மேல் பனி உறைந்து காணப்படுகிறது. ஆனால் இந்த தடைகள் எதுவும் 90 வயதான மூதாட்டியை தடுக்கவில்லை.

உறைபனியையும் பொருட்படுத்தாமல் 6 மைல் தூரம் நடந்துசென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 90 வயது மூதாட்டி..
கொரோனா தடுப்பூசி
  • Share this:

அமெரிக்காவின் சியாட்டி பகுதியில் குளிர்கால புயல் காரணமாக ஒரு அடிக்கு மேல் பனி உறைந்து காணப்படுகிறது. ஆனால் இந்த தடைகள் எதுவும் 90 வயதான மூதாட்டியை தடுக்கவில்லை. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்கா தான். தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் பலர் பயந்து வரும் நிலையில் 90 வயது மூதாட்டி மக்களுக்கு ஒரு முன்னுதாரணாக திகழ்ந்திருக்கிறார்.

ஃபிரான் கோல்ட்மேன் என்ற மூதாட்டி தனது முதல் டோஸ் தடுப்பூசியை பெறுவதற்காக சுமார் ஆறு மைல் தூரம் நடை பயணம் மேற்கொண்டதாக சியாட்டில் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய ஃபிரான் கோல்ட்மேன், ``நான் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக அப்பாயின்மென்ட் பெற தினமும் காலையிலும், பிற்பகலிலும் மருத்துவமனைக்கு தொடர்பு கொள்வேன். தடுப்பூசி பெறுவதற்காக பெரும்பாலும் இரவு நேரங்களில் ஆன்லைனில் இருந்தேன்" என்று கூறினார். இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வாய்ப்பை அவர் பெற்றுள்ளார். 

ஆனால் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு வலுவான  குளிர்கால புயல் அப்பகுதியை தாக்கியது. நகரம் முழுவதும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக தெருக்களில் மூடுபனி சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இருப்பினும் மனம் தளராத மூதாட்டி, ரெயின் ஜாக்கெட், கையுறைகள் மற்றும் பணியில் இருந்து  தன்னை பாதுகாத்துக்கொள்ள குளிர் தாங்கும் ஆடைகளை அணிந்து கொண்டார். பனிப்பாதைகளில் சாதாரண காலணிகளை அணிய முடியாது என்பதால் பூட்ஸ் அணிந்து கொண்டு நடைபாதை சரிபார்ப்புக்காக கைகளில் குச்சிகளை எடுத்துக்கொண்டு தடுப்பூசி போட சென்றுள்ளார். 



"இது எளிதானது அல்ல, சவாலானது," என்று மூதாட்டி கூறியுள்ளார். அவ்வாறு, தனது வீட்டில் இருந்து சுமார் 6 மைல் தூரம் பனி சூழ்ந்த பகுதியில் நடந்து சென்று மருத்துவமனையை அடைந்துள்ளார். இருப்பினும் கோல்ட்மேன் தனது பதிவு செய்யப்பட்ட சந்திப்பு நேரத்தை விட 5 நிமிடங்கள் தாமதமாக சென்றுள்ளார். ஆனாலும் அவர் தனது முதல் டோஸ் தடுப்பூசியை வெற்றிகரமாக போட்டுக் கொண்டார். இது குறித்து பேசிய  அவரது மகள் ரூத் கோல்ட்மேன், " எனது தாயின் செயலால் நான் ஆச்சரியப்படவில்லை. நாங்கள் நகருக்கு வெளியே இருக்கிறோம். மேலும் இதுபோன்ற சவால்கள் நிறைந்த சமயங்களில் நாங்கள் வெளியில் செல்வதை விரும்புகிறோம்" எனக் கூறியுள்ளார். இவர் நியூயார்க்கின் பஃபேலோவில் வசித்து வருகிறார்.
Published by:Ram Sankar
First published: