• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இந்தியாவில் நடைபெறும் கைவினைப்பொருள் கண்காட்சியில் 90 உலக நாடுகள் பங்கெடுப்பு!

இந்தியாவில் நடைபெறும் கைவினைப்பொருள் கண்காட்சியில் 90 உலக நாடுகள் பங்கெடுப்பு!

மார்ட் பகுதியில் உள்ள எட்டு ஹால்களில், 900 நிரந்தரமான ஷோரூம்களுடன், 650க்கும் மேற்பட்டவர்களால் கண்காட்சி காட்சிப்படுத்தப்படும்.

  • Share this:
இந்தியா எக்ஸ்போ சென்ட்டர் & மார்ட்டில் IHGF-டெல்லி கண்காட்சி நடைபெற்று வருகின்றது. அக்டோபர் 28 முதல் 31 வரை நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் 90 உலக நாடுகள் பங்கெடுக்கின்றன. உலகம் முழுவதிலிருந்தும் வாங்கும் நிறுவனங்கள், டிபார்ட்மென்ட் ஸ்டார்கள் என்று பல்வேறு நாட்டினரும் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும் கண்காட்சிக்கு பறந்து வருகிறார்கள். இந்த கண்காட்சியின் சிறப்பம்சம்.

கடந்த புதன் கிழமையன்று, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, நியூசிலாந்து உட்பட 90 நாடுகள் எக்ஸ்போர்ட் புரொமோஷன் கவுன்சில் ஃபார் ஹாண்டிகிராஃப்ட்ஸ் (EPCH) ல் பங்கெடுக்க பதிவு செய்திருந்தது.

EPCH இன் சேர்மன் ராஜ்குமார் மல்ஹோத்ரா, வீட்டு உபயோகப்பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வண்ண மற்றும் அலங்கார விளக்குகள், ஃபர்னிச்சர், கிறிஸ்துமஸ் அலங்காரம், ஃபேஷன் உபகரணங்கள் மற்றும் ஆபரணங்கள், கார்பெட்டுகள், குளியலறை பொருட்கள், தோட்டக்கலை உபகரணங்கள், கல்வி மற்றும் விளையாட்டு பொருட்கள், காகித கைவினைப்பொருள் உள்ளிட்ட 12 வெவ்வேறு தயாரிப்பு வகைகளில், 300 க்கும் அதிகமான டிசைன்களை வெளிப்படுத்தி, 2000 க்கும் அதிகமான புதிய தயாரிப்புகளை கண்காட்சியில் வைப்பதாக கூறினார்.

இந்த கண்காட்சி, மார்ட் ஏரியாவில் உள்ள எட்டு ஹால்களில், 900 நிரந்தரமான ஷோரூம்களுடன், 650 க்கும் மேற்பட்டவர்களால் காட்சிப்படுத்தப்படும்.

Must Read | தொழில்நுட்ப உலகில் அடுத்த மைல்கல்… ‘மெட்டாவெர்ஸ்’ என்னும் பிரம்மாண்டமான விர்ச்சுவல் ரியாலிட்டி!

இந்த கைவினைப்பொருள் பரிசுக் கண்காட்சியில் பங்கெடுக்கும் உலக நாடுகளின் பட்டியல் இங்கே. உலகளாவிய நிறுவனங்களான ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த Wikholm Form AB மற்றும் Nordlys Design AB இல் இருந்து வாங்குபவர்கள், Landmark Group, Homecentre LLC மற்றும் Homes R Us, சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்த Lals Group, இங்கிலாந்து நாட்டின் Rex London Harewood International Products Ltd, மற்றும் அமெரிக்காவின் Midway Sales, Webbed Sphere Inc மற்றும் Uttermost Company, USA ஆகிய நிறுவனங்கள் டெல்லியில் நடந்துகொண்டிருக்கும் இந்த கண்காட்சியில் பங்கெடுத்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி, இந்தியாவின் பிரபல, ஈகாமர்ஸ் நிறுவனங்கள், ரீடெயில் மற்றும் ஆன்லைன் பிராண்டுகளும் கண்காட்சியில் பங்கெடுக்கின்றன. அமேசான், லான்ட்மார்க் இந்தியா, ரிலையன்ஸ், ஆதித்ய பிர்லா ஃபேஷன் மற்றும் ரீடெயில், Furniturewalla, காத்ரேஜ், ஹோம் டவுன், மற்றும் ஆன்லைன் பிராண்டுகளான இந்தியா பஜார், சிக்னிஃபை இந்தியா ஃபியூச்சர் குரூப், ஆர்ச்சிஸ் போன்ற நிறுவனங்களும் கலந்து கொள்கிறன என்று கைவினைப்பொருள் ஏற்றுமதி கவுன்சில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கைவினைப்போருட்களின் ஏற்றுமதி 60.34% உயர்ந்துள்ளது. பல்வேறு நாடுகளும் பங்கெடுக்கும் இந்த மிகப்பெரிய கைவினைப் பொருள் கண்காட்சியில் இந்தியாவின் ஏற்றுமதி வணிகம் கணிசமாக உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: