துபாய் லாட்டரியில் ரூ.7 கோடி வென்ற 9 வயது இந்தியச் சிறுமி!

”துபாய் டியூட்டி ஃபிரீயில் ஒரு மில்லியன் டாலர் பெறும் இந்தியர்களில் எலிஸா 140 வது நபர்”

news18
Updated: April 17, 2019, 4:23 PM IST
துபாய் லாட்டரியில் ரூ.7 கோடி வென்ற 9 வயது இந்தியச் சிறுமி!
லாட்டரி
news18
Updated: April 17, 2019, 4:23 PM IST
துபாயில் ஒன்பது வயது இந்தியச் சிறுமி ஆறு வருட தொடர் முயற்சிக்குப் பின் துபாய் டியூட்டி ஃபிரீ என்னும் நிறுவனம் நடத்தும் மில்லினியம் மில்லினியர் லாட்ரி டிக்கெட்டில் ஒரு மில்லியன் டாலர் (6,94,02,500 ரூபாய் ) தட்டிச் சென்றுள்ளார்.

துபாய் வசித்து வரும் இந்தியப் பள்ளி மாணவியான எலிஸா  லாட்டரி குலுக்கலில் வென்றுள்ளார்.

எலிஸாவின் தந்தை துபாயில் 19 வருடங்களாக வசித்து வருகிறார். அவர் துபாய் டியூட்டி ஃபிரீ ( வரியில்லா லாட்டரி) மில்லினியம் மில்லினியர் போட்டியில் கடந்த 2004 ஆண்டு முதல் விளையாடுகிறார் என கலீஜ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


படிக்க.. திருமண உடையுடன் வந்து மணமகனை பதறவைத்த முன்னாள் காதலி!

அவருக்கு ஒன்பது மிகவும் லக்கியான நம்பர் என்பதால் கூட்டுத்தொகை 9 வரும் No.0333 என்னும் எண்ணை ஆன்லைனில் தன் மகளின் பெயரில் வாங்கியுள்ளார்.

இப்படி அவர் தன் மகள் எலிஸா பெயரில் லாட்டரி அடிப்பது முதல் முறை அல்ல. 2013 ஆண்டு இதே துபாய் வரியில்லா லாட்டரியில் luxury McLaren Coupe காரைத் தட்டிச் சென்றிருக்கிறார்.

Loading...

அதை வைத்தே இந்த முறையும் அவர் தன் மகளின் பெயரில் டிக்கெட் பதிவு செய்திருக்கிறார். தற்போது அவரே எதிர்பாராத விதத்தில் வெற்றி பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கலீஜ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

1999 ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து மில்லினியம் மில்லினியர் போட்டியில் ஒரு மில்லியன் டாலர் பெறும் இந்தியர்களில் எலிஸா 140 வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க.. ரூ.25 லட்சம் சம்பளத்தில் இப்படியும் ஒரு வேலையா! 40,000 விண்ணப்பங்கள் குவிந்த 'World's Coolest Job'

”ஒரு மில்லியனுக்கான போட்டியில் நான் தவறாமல் கலந்து கொள்வேன். இதுவரை 43 சீரீஸ்களில் பங்கேற்றுள்ளேன். ஒரு சீரீஸைக் கூட விட்டதில்லை. அதேபோல் மல்டி மில்லினியம் மில்லினியர் போட்டியிலும் கலந்துக் கொள்வேன்” என எலிஸாவின் தந்தை கலீஜில் பேசியுள்ளார்.

மற்ற இரண்டு வெற்றியாளர்கள் லக்ஸுரி மோட்டார் பைக்கை தட்டிச் சென்றுள்ளனர். அதில் ஒருவர் துபாயில் வசிக்கும் 23 வயது இந்திய இளைஞராவார். அவர் ’இந்தியன் ஸ்கவுட் பாப்பர்’ (Indian Scout Bobber) லக்ஸுரி பைக்கை லாட்டரியில் தட்டிச் என்றுள்ளார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...