Corona Time pass: "நாள் முழுவதும் டூடூல் வரைவேன்" - ஓராண்டாக டூடுல் வரைந்த 88 வயது முதியவர்!

ஓராண்டாக டூடுல் வரைந்த 88 வயது முதியவர்

அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் சீமேன் ஓராண்டு முழுவதும் டூடுல் வரைவதை மட்டுமே பொழுதுபோக்காக வைத்திருந்து, ஏராளமான டூடுல்களை வரைந்துள்ளார்.

  • Share this:
அமெரிக்காவின் நியூ ஹேம்ஷைர் பகுதியில் ராபர்ட் சீமேன் (Robert Seaman) வசித்து வருகிறார். 88 வயதான அவர் ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வந்துள்ளார். சிறு வயது முதல் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட அவருக்கு இந்த கொரோனா காலம் மீண்டும் ஒரு வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டது. வெளியில் சென்றுவர கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததால் பலரும் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர்.

மற்றவர்களைப்போல் ராபர்ட் சீமேனும் மேப்பில்வுட் (Maplewood) பகுதியில் இருந்த தன்னுடைய அப்பார்ட்மென்ட்டில் இருந்துள்ளார். ஓய்வு நேரத்தை எப்படி கழிப்பது என யோசித்த அவர், ஓவியம் வரைவது என முடிவெடுத்தார். பேனா, பென்சில், பேப்பர் மற்றும் கலர் பேனாக்களை வைத்து நாள்தோறும் டூடுல் வரைந்துள்ளார்.

மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பது, வித்தியாசமான சிந்தனைகளை டூடுல் மூலம் உயிர்கொடுப்பது என பொழுதை கழித்துள்ளார். தொலைக்காட்சி பார்க்கும்போது அல்லது ஏதேனும் வீடியோ பார்த்தால்கூட, அதில் இருந்து ஒரு புதுமையான ஐடியாவை எடுத்து அதனை ஓவியமாக மாற்றி வந்துள்ளார்.

ALSO READ : கொரோனாவுக்கு எதிரான போரில் உதவிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விமானி.. இங்கிலாந்து பிரதமர் விருது வழங்கி பாராட்டு

சுமார் ஓராண்டாக, டூடுல் வரைவது மட்டுமே தன்னுடைய முழுநேர பொழுதுபோக்காக ராபர்ட் சீமேன் செய்து வந்துள்ளார். தன்னுடைய அனுபவம் மற்றும் டூடுல் வரைவது குறித்து அவர் பேசும்போது, " சிறுவயது முதல் ஓவியம் வரைவதில் எனக்கு தனிப்பட்ட விருப்பம் உண்டு. தனிமையை விரும்புவனாகவும், வெளியில் ஊர் மட்டுமே சுற்றித்திரிபவர்களுக்கு இடைப்பட்டவன் நான். தனிமையில் இருக்கும்போதெல்லாம் என்னுடைய ரூமில் இருக்கும் மேஜையில் அமர்ந்து கொண்டு, எனக்கு தோன்றுவதை வரையத் தொடங்கிவிடுவேன்.

ALSO READ : தந்தைக்காக ஆக்சிஜன் சிலிண்டர் கேட்ட பெண்ணை உடலுறவுக்கு அழைத்த நபர் - நெட்டிசன்கள் ஆவேசம்!

அது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு. நான் ஒரு ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தேன். அது எனக்கு சலிப்பை ஏற்படுத்திவிட்டது. சில காலம் வரையாமல் இருந்தேன். இந்த கொரோனா காலம் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது. அமைதியாக என்னுடைய அறையில் அமர்ந்து கொண்டு எண்ணுடைய சிந்தைனைகளுக்கு உயிர் கொடுத்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உங்களுக்கு பிடித்தமான விஷயம் ஒன்றை நீங்கள் சில காலம் செய்யாமல் இருந்து, மீண்டும் அதனை செய்யும்போது உங்களுக்குள் ஏற்படும் பூரிப்பை அளவிட முடியாது.

அதனை நான் தற்போது அனுபவித்தேன். டூடுல் வரைவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வார்த்தைகளால் கவிதைகளை கோர்ப்பதுபோல், எண்ணத்தில் உதிக்கும் கற்பனையை ஓவியமாக மாற்றும்போது, ஏதோ ஒன்றை புதிதாக அடைந்ததுபோல் உணர முடிகிறது" எனத் தெரிவித்தார். சுமார் ஓராண்டுக்குப் பிறகு வெளிக்காற்றை சுவாசிப்பதாகவும், புதிய மனிதர்களை சந்தித்து உரையாடுவதாகவும் தெரிவித்த அவர், ஏராளமான டூடுல்களை வரைந்திருப்பதாக தெரிவித்தார்.

ALSO READ : தள்ளுவண்டியில் முட்டை திருடிய தலைமை காவலர்..வீடியோ வைரலான நிலையில் சஸ்பெண்ட்

மேலும் தான் வரைந்த டூடுல்களை மகள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்புவதை ராபர்ட் சீமேன் வழக்கமாக வைத்திருந்துள்ளார். பின்னர், முகநூலில் பதிவேற்றத் தொடங்கிய அவர், இணையதளம் மூலம் விற்பனை செய்யவும் தொடங்கினார். ஏராளமானோர் ராபர்ட் சீமேனின் டூடுல்களை விரும்பி வாங்கியுள்ளனர். டூடுல் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை கொரோனா காலத்தில் பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவியதாகவும், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாகவும் அவர் வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் என்னுடைய இளமைக்காலத்தை திருப்பிக் கொடுத்ததுபோல் உணர்வதாக ராபர்ட் சீமேன் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published: