ஹோம் /நியூஸ் /உலகம் /

85 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த அமெரிக்க பயணியின் கேமராக்கள்.. புதைந்திருக்கும் பொக்கிஷம் - கனடாவின் பனிமலையில் மீட்பு

85 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த அமெரிக்க பயணியின் கேமராக்கள்.. புதைந்திருக்கும் பொக்கிஷம் - கனடாவின் பனிமலையில் மீட்பு

85 ஆண்டுகளுக்கு பின் பனிக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட கேமரா

85 ஆண்டுகளுக்கு பின் பனிக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட கேமரா

திடீர் காலநிலை மாற்றத்தால் மலை ஏற சிரமம் ஏற்பட்டு, வாஷ்பர்ன் மற்றும் ராபர்ட் பேட்ஸ் தங்களது கேமரா மற்றும் உபகரணங்களை நடுவழியில் விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

85 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவின் யூகோன் பனிப்பாறை பகுதியில் கைவிடப்பட்ட, புகழ்பெற்ற அமெரிக்க ஆய்வாளர் பிராட்ஃபோர்ட் வாஷ்பர்னின்(Bradford Washburn) கேமராக்கள் மற்றும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிராட்ஃபோர்ட் வாஷ்பர்னின் என்பவர் மாசசூசெட்ஸில் உள்ள பாஸ்டன் அறிவியல் அருங்காட்சியகத்தின் நிறுவனர், புகைப்படக் கலைஞர், வரைபடக் கலைஞர் மற்றும் இயக்குநராக இருந்தார். மலை ஏறுவதில் அதீத ஆர்வம் கொண்டவர் இவர் அதைப் படம் பிடித்து சேகரித்து வந்தார்.

1937 ஆம் ஆண்டில், வாஷ்பர்ன், மற்ற மூன்று மலையேறுபவர்களுடன் 5,226 மீட்டர் (17,145 அடி) உயரத்தில் உள்ள கனடாவின் மூன்றாவது உயரமான சிகரமான லூகானியா மலையின் ஏற முயற்சி மேற்கொண்டார். அந்த நேரத்தில் இதுதான் வட அமெரிக்காவின் உயர்ந்த சிகரமாக இருந்தது.

Twitter செயலிக்கு மாற்றாக Bluesky உருவாக்கும் ஜாக்!

அந்த நேரத்தில் ஏற்பட்ட திடீர் காலநிலை மாற்றத்தால் மலை ஏற சிரமம் ஏற்பட்டுள்ளது. வாஷ்பர்ன் மற்றும் அவரோடு மலை ஏறிய அமெரிக்க மலையேற்ற வீரர் ராபர்ட் பேட்ஸ் தங்களது கேமரா மற்றும் உபகரணங்களை நடுவழியில் விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பனிப்பொழிவு அதிகம் இருக்கும் இடம் என்பதால் அந்த உபகரணங்கள் பனியால் மூடப்பட்டு விட்டன.

85 ஆண்டுகள் கழித்து, தற்போது ஸ்போர்ட்ஸ் வீடியோ தயாரிப்பாளர்களான டெட்டன் கிராவிட்டி ரிசர்ச் தலைமையிலான குழு, யூகோன் பிரதேசத்தில் உள்ள க்ளுவான் பூங்காவில் தொலைந்து போன கேமராக்கள் மற்றும் பிற உபகரணங்களைக் கண்டறியும் நோக்கத்துடன் பயணித்தது.

அதன்படியே பிராட்ஃபோர்ட் வாஷ்பர்னின் கேமராக்கள் மற்றும் மலையேற்ற உபகரணங்கள்  மீட்டெடுக்கப்பட்டுள்ளன. 85 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலைகள் எப்படி இருந்தது என்பதை விளக்கும் படங்கள் அவரின் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ள புதையுண்ட கேமராவில் இருந்து கிடைத்துள்ளன.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Camera, Canada, Travel