இளம் வயதி்னருடன் டேட்டிங் செய்ய விரும்பும் 85 வயது பாட்டி: லவ் பார்ட்னர் தேவை என விளம்பரம்!

Hattie Retroage

ஹட்டி ரெட்ரோஜ்-க்கு இரண்டு வாரிசுகளும் அவர்கள் மூலமாக 3 பேரக்குழந்தைகளும் இருக்கிறார்கள். 1984ம் ஆண்டு அவருடைய கணவர் தனது குழந்தைகளின் கல்விக்காக சரியான முறையில் பணம் சம்பாதிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவரை விவாகரத்து செய்தார்.

  • Share this:
39 வயது காதலரை பிரிந்த பின்பு, இளம் வயதினருடன் டேட்டிங் செய்ய விரும்புவதாக 85 வயது பாட்டி ஒருவர் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் ஹட்டி ரெட்ரோஜ் (Hattie Retroage) இந்த மூதாட்டிக்கு 85 வயது ஆகிறது. இவர் ஏற்கனவே செய்தித்தாள் ஒன்றில் 35 வயதுக்கு குறைவான ஆணுடன் டேட்டிங் செய்ய விரும்புவதாக விளம்பரம் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அந்த விளம்பரத்துக்கு பின்னர் ஏராளமான டேட்டிங் கோரிக்கைகள் அவருக்கு வந்ததாம்.

ஹட்டி ரெட்ரோஜ்-க்கு 48 வயது இருக்கும் போது விவாகரத்து நடந்திருக்கிறது. அதன் பின்னர் அப்போதிலிருந்தே இவர் இளம் வயது ஆண்களுடன் டேட்டிங் செய்து வந்திருக்கிறார்.

டிண்டர் (Tinder) எனப்படும் ஆன்லைன் டேட்டிங் அப்ளிகேஷனை பயன்படுத்தி வந்த மூதாட்டி ஹட்டி ரெட்ரோஜ், வாரத்திற்கு 3 முறை இளம் வயதினருடன் வழக்கமாக டேட்டிங்கில் ஈடுபட்டு வந்திருக்கிறார். எனினும் அந்த ஆப்-ல் அவருடைய கணக்கு பிளாக் செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு எந்தவொரு டேட்டிங் ஆப்களையும் அவர் பயன்படுத்தாமல் சில காலம் டேட்டிங் செய்யாமல் இருந்து வருகிறார்.

Also Read:  6 வயது சிறுமியை 3 வருடமாக பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

39 வயதாகும் நபர் ஒருவருடன் இருந்த உறவை சமீபத்தில் ஹட்டி ரெட்ரோஜ் முறித்திருக்கிறார். இதனையடுத்து தான் மீண்டும் இளம் வயதினருடன் டேட்டிங் செய்ய இருப்பதாக ஹட்டி ரெட்ரோஜ் தெரிவித்தார்.

Bumble எனப்படும் டேட்டிங் தளத்தில் டேட்டிங் செய்வதற்கான விளம்பரத்தை விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்த ஹட்டி ரெட்ரோஜ், என்னுடைய தோழர்கள் சிலர் பம்பிள் தளத்தில் தங்களுக்கு ஜோடி கிடைத்ததாக தெரிவித்ததால் இந்த முடிவை எடுப்பதாக அவர் தெரிவித்தார். நான் இப்போது மீண்டும் டேட்டிங்கை தொடங்குவேன், என்னால் மீண்டும் நெருக்கமாக இருக்க முடியும், மேலும் மீண்டும் அன்பை அனுபவிப்பேன்! (85 வயதில்!), " அது அற்புதமானது என்று அவர் கூறினார்.

Also Read: ₹96,000 விலை கொண்ட ஏசியை வெறும் ₹5,800க்கு விற்ற அமேசான்...

தொடர்ந்து பேசிய அவர் தனக்கு நேற்று காலை தான் இஸ்ரேலைச் சேர்ந்த இளைஞரிடம் இருந்து அழைப்பு வந்தது, அவர் என் மீது ஆசையாக இருப்பதாக தெரிவித்தார். மிகவும் அழகாக இருந்தது என்று தெரிவித்தார் ஹட்டி ரெட்ரோஜ்.

ஹட்டி ரெட்ரோஜ்-க்கு இரண்டு வாரிசுகளும் அவர்கள் மூலமாக 3 பேரக்குழந்தைகளும் இருக்கிறார்கள். 1984ம் ஆண்டு அவருடைய கணவர் தனது குழந்தைகளின் கல்விக்காக சரியான முறையில் பணம் சம்பாதிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவரை விவாகரத்து செய்தார். இவர் டான்சராக இருந்த நிலையில் தற்போது வாழ்க்கை பயிற்றுனராகவும் எழுத்தாளராகவும் மாறியிருக்கிறார். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அமெரிக்காவில் பிரபலமானவராகவும் இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த மாதம் இதே போல அதிக வயது வித்தியாசம் இருக்கும் (37 ஆண்டுகள்) தம்பதியினர் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளானார்கள். உங்களின் காதலியை பார்ப்பதற்கு என்னுடைய காதலியின் பாட்டி போன்றே இருக்கிறார் என நெட்டிசன் ஒருவர் கிண்டலடித்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: