ஹோம் /நியூஸ் /உலகம் /

85% தண்டிக்கப்படாத பத்திரிகையாளர் கொலை வழக்குகள்... விரைந்து முடிக்க கோரும் யுனெஸ்கோ!

85% தண்டிக்கப்படாத பத்திரிகையாளர் கொலை வழக்குகள்... விரைந்து முடிக்க கோரும் யுனெஸ்கோ!

பத்திரிகையாளர்கள் கொலை

பத்திரிகையாளர்கள் கொலை

தீர்க்கப்படாத வழக்குகள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இருக்கும்போது உலகில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க முடியாது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • chennai, India

ஐக்கிய நாடுகள் அமைப்பு நவம்பர் 2 ஆகிய இன்று "பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டுவரும் சர்வதேச தினம்” அனுசரிக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது.

உலக அளவில் சண்டைகளும் போர்களும் அதிகரித்து வரும் நிலையில் கருத்து சுதந்திரம் என்பது ஒடுக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. தனது கருத்துக்களை வெளிப்படையாக சொல்லும் தனி நபர், இயக்கம், வலை தளம், என்று எல்லாவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. அப்படி 1995 முதல் 2021 வரையான காலத்தில் கொலை செய்யப்பட்ட, பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை  1796 ஆக உள்ளது.

அதிகபட்சமாக 2012 இல் 147 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளார். 2014 மற்றும் 2019 க்கு இடையில், கிட்டத்தட்ட 1,500 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் 400க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். ஆனால் உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்களின் கொலைகளில் பெரும்பாலானவை தண்டிக்கப்படாமல் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எல்லையில் அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகள் நிறுத்திவைப்பு : உலகப்போராக உருமாறுகிறதா உக்ரைன்- ரஷ்யா போர்?

இது தொடர்பாக இன்று ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், கிட்டத்தட்ட 86 சதவிகித பத்திரிகையாளர்களின் கொலைகளுக்கான வழக்குகளுக்கு தண்டனை அளிக்கப்படாமல் உள்ளது. இந்த எண்ணிக்கை என்பது அதிர்ச்சியூட்டும் அளவிற்கு அதிகமாக உள்ளது என்று வருத்தம் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் முறையாக விசாரிக்கப்படுவதையும்,  அந்த குற்றத்தை செய்த குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தண்டனை வழங்கப்படுவதையும் உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஆவண செய்ய வேண்டும் என்று யுனெஸ்கோ கோரியது.

முன்னர் இருந்த எண்ணிக்கையை விட கடந்த பத்து ஆண்டுகளில் தண்டனையின்மை விகிதத்தில் 9 சதவீதம் குறைந்திருந்தாலும் வன்முறையின் சூழல் என்பதை நிறுத்த இது போதாது என்று யுனெஸ்கோ கூறியது.

மேலும் யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசோலே தனது அறிக்கையில், "தீர்க்கப்படாத வழக்குகள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இருக்கும்போது உலகில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க முடியாது" என்று கூறினார்.

இந்தோனேசியாவின் பாலியில் 10 வருடம் வரை நீங்கள் தங்கலாம் ! எப்படி தெரியுமா?

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், 117 பத்திரிகையாளர்கள் தங்கள் வேலையைச் செய்ததற்காக படுகொலை செய்யப்பட்டனர். இதில் பலர் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கண்முன்னே கொல்லப்பட்டனர்.

இதை விரைவாக சரி செய்ய வேண்டும். பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுவதை தடுப்பதோடு அவர்களது பாதுகாப்பிற்கும் முன்னுரிமை தர வேண்டும். முன்னர் கொல்லப்பட்ட வழக்குகளையும் விரைவில் விசாரித்து சரியான தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இது குறித்த தேசிய ஊடக சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்க மற்றும் செயல்படுத்த உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

இதனால் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு "பத்திரிகையாளர்களின் உரிமைகளைச் செயல்படுத்துவதற்கும், அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் விசாரிக்கப்பட்டு, வழக்குத் தொடரப்படுவதை உறுதி செய்வதற்கும்" பயிற்சி அளிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் நம்பிக்கை தெரிவிக்கிறது..

Published by:Ilakkiya GP
First published:

Tags: Journalist Murder, United Nation