பெரு நாட்டில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட, மனித உடலை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பெரு நாட்டின் லிமா பிராந்தியத்தில் கஜமர்குயில்லா என்னும் இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்போது பூமிக்கடியில் வட்ட வடிவிலான அறைக்குள் இருந்து, உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கை, கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு அமர்ந்த நிலையில் இருந்த உடலுக்கு அருகே, பானை, சிறிய வடிவிலான குடுவை மற்றும் உணவு தானியங்கள் போன்றவையும் கிடந்தன. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட, மனித உடல் இது என தொல்லியல் துறையினர் கூறுகின்றனர்.
சக்லா மலைப்பகுதியில் வாழ்ந்து வந்த, ஆதி கால சமூகத்தை சேர்ந்தவரின் உடலாக அது இருக்கலாம் என கருதப்படுகிறது. கண்டெடுக்கப்பட்டுள்ள உடலின் துல்லியமான காலத்தினை அறியும் வகையில், ரேடியோ கார்பன் டேட்டிங் முறையில் பரிசோதிக்க தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
தொல்லியல் துறையினர் கண்டுபிடித்த உடலின் பாலினம் குறித்து தெரியவில்லை.சக்லா மலைப்பகுதியில் வாழ்ந்து வந்த, ஆதி கால சமூகத்தை சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடலை கயிறுகளால் கட்டும் பழக்கத்தை கொண்டிருந்ததாக தொல்லியல் துறையினர் கூறுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Archaeology, Archeological site, Mummy, Peru