Home /News /international /

ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் 80 பேர் பலி..?

ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் 80 பேர் பலி..?

ஈரான் தாக்குதல்

ஈரான் தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி நடத்திய தாக்குதலில் 80 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள சர்வதேச விமானநிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்பு படையின் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். மேலும், உளவுப் பிரிவுத்தலைவர் உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சுலைமானியின் மரணத்திற்கு நிச்சயம் பழி தீர்க்கப்படும் என அந்நாட்டு அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த சூழலில் ஈராக்கில் தனது ராணுவத்தை குவிக்கும் பணிகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வருவது ஈரான் ராணுவத்தை மேலும் கோபம் கொள்ளச் செய்தது. ஈராக்கில் இருந்து படைகளை திரும்பப்பெற அமெரிக்கா மறுத்த நிலையில், அல் அசாத் பகுதியில் இருந்த படைதளத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.



இந்த ஏவுகணைத் தாக்குதல் குறித்து சேத நிலவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் 80 பேர் பலியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: US-Iran Tensions

அடுத்த செய்தி