ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்காவில் 4 இந்தியர்கள் கடத்தல்.. 8 மாத குழந்தை உட்பட குடும்பத்தோடு கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!

அமெரிக்காவில் 4 இந்தியர்கள் கடத்தல்.. 8 மாத குழந்தை உட்பட குடும்பத்தோடு கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!

கடத்தப்பட்டவர்கள்

கடத்தப்பட்டவர்கள்

உற்சாகமாக குடும்பத்துடன் வணிக வளாகத்தை சுற்றி பார்த்து கொண்டிருந்த அவர்களை திடீரென மர்மநபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, Indiacaliforniacalifornia

  அமெரிக்காவில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  பஞ்சாப்பை சேர்ந்த ஜஸ்தீப் சிங் (36), மனைவி ஜஸ்லீன் கவுர்(27), இவர்களது 8 மாத குழந்தையுடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை ஜஸ்தீப் சிங் அவரது மனைவி, குழந்தை மற்றும் உறவினர் அமந்தீப் சிங் (39) ஆகியோருடன் மெர்சிட் நகரில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றிருந்தார். உற்சாகமாக சுற்றி பார்த்து கொண்டிருந்த அவர்களை திடீரென மர்மநபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்றுள்ளார்.

  இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்றும், அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது. எதற்காக ஜஸ்தீப் சிங்கின் குடும்பத்தினரை கடத்தினார்கள், யார் அவர்கள் என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: America, California, Family, Kidnap, Punjab, US