துபாயில் பேருந்து விபத்து - 8 இந்தியர்கள் உள்பட 17 பேர் உயிரிழப்பு

விபத்தில் உயிரிழந்தவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

news18
Updated: June 7, 2019, 10:50 AM IST
துபாயில் பேருந்து விபத்து - 8 இந்தியர்கள் உள்பட 17 பேர் உயிரிழப்பு
விபத்து நடந்த இடம்
news18
Updated: June 7, 2019, 10:50 AM IST
ஐக்கிய அமீரக நாடான துபாயில் நடந்த பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஓமன் நாட்டின் தலைநகரம் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

துபாய் அருகே வந்தபோது, அங்கிருந்த அறிவிப்பு பலகையின் மீது திடீரென மோதிய பேருந்து விபத்தில் சிக்கி நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்தில் 8 இந்தியர்கள் பலியாகியுள்ளதாக துபாயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.



ராஜகோபாலன், பெரோஸ் கான் பதான், ரேஷ்மா பெரோஸ் கான் பதான், தீபக் குமார், ஜமாலுதீன் அரக்காவீட்டில், கிரண் ஜான்னி, வாசுதேவ், திலக்ராம் ஜவஹகர் தாகூர் ஆகிய 8 இந்தியர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

First published: June 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...