ரஷ்யாவில் விமான விபத்து: 71 பேர் பலி

news18
Updated: February 11, 2018, 9:05 PM IST
ரஷ்யாவில் விமான விபத்து: 71 பேர் பலி
news18
Updated: February 11, 2018, 9:05 PM IST
மாஸ்கோ அருகே ரஷ்ய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 71  பயணிகளும் இந்த விபத்தில் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் டோமோடேவா விமான நிலையத்தில் இருந்து அண்டோனோவ் ஏஎன்- 148 என்ற விமானம் ஒர்ஸ்க் நகருக்கு புறப்பட்டது. இந்த விமானம்  சரடோவ்  ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த விமானம் மாஸ்கோ நகருக்கு வெளியே ராமென்ஸ்கை மாவட்டத்துக்கு அருகே சென்றுகொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கியது.  இந்த விமானத்தில் மொத்தம் 65 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்துள்ளனர். இவர்கள் அனைவருமே விபத்தில் பலியாகியுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அருகுனோவோ என்ற கிராமத்தில் விமானம் எரிந்து கொண்டு தரையை நோக்கி வந்ததாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. விமானம் விழுந்த இடம் சுற்றிலும் தீ பற்றி எரிந்ததாகவும்  அதன் பாகங்கள் துண்டு துண்டாக சிதறி கிடந்ததாகவும் கூறப்படுகின்றன.

தற்போது அங்கு மீட்பு அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கிட்டத்தட்ட 150 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் விமானம் மிகப் பெரிய விபத்துக்குள்ளானது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: February 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்