ஹோம் /நியூஸ் /உலகம் /

காதல் வயது பார்க்காது... 70 வயது முதியவரை மணந்த 19 வயது பெண்

காதல் வயது பார்க்காது... 70 வயது முதியவரை மணந்த 19 வயது பெண்

பாகிஸ்தான் தம்பதி

பாகிஸ்தான் தம்பதி

தினமும் காலையில் நடைபயிற்சி செல்லும்போது சந்தித்துக்கொண்டதாகவும், பின்னர் இது காதலாக மாறியதாகவும் இருவரும் தெரிவிக்கின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, Indialahorelahore

  பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் 70  வயது முதியவரை திருமணம் செய்துள்ள சம்பவம் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.

  காதலுக்கு கண் இல்லை என்றும் காதல் மதம், ஜாதி, அழகு, வயது போன்றவற்றை பார்ப்பது இல்லை என்றும் பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது. இதை நிரூப்பிப்பது போன்ற சம்பவங்களுக்கு நடந்துதான் வருகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது பாகிஸ்தானில் நடந்தேறியுள்ளது.

  பாகிஸ்தானை சேர்ந்த யூ டியூபரான  சையித் பஷீத் அலி என்பவர் தனது யூ டியூப் சேனலில்,  சமீபத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் நேர்காணல் தொடர்பான அந்த வீடியோ தற்போது ஏராளமான பார்வையை பெற்றுள்ளது.

  இந்த வீடியோவில் உள்ள லியாக்கத் அலி என்ற 70 வயது முதியவரும் சுமைலா அலி என்ற 19 வயது பெண்ணும் அண்மையில் திருமணம் செய்துள்ளனர். பாகிஸ்தானின் லாகூர் பகுதியைச் சேர்ந்த இந்த இருவரும் தினமும் காலையில் வாக்கின் சென்றபோது சந்தித்துள்ளனர். நடைபயிற்சியின்போது சுமைலாவின் பின்னால் சென்ற லியாக்கத் அலி, பாடல் ஒன்றை முனுமுனுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கம் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

  இதையும் படிங்க: ' நீங்க சரியில்லை' கனடா பிரதமரை திட்டிய சீன அதிபர்.. வீடியோ லீக் ஆனதால் பரபரப்பு!

  தங்கள் திருமணம் குறித்து சுமைலா கூறுகையில்,  ‘காதலில் ஒருவர் வயதை பார்க்கமாட்டார்’ என்றார். தங்களது திருமணத்துக்கு முதலில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறும் சுமைலா பின்னர் அவர்களை தான் சமாதானம் செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  லியாக்கத் அலி கூறுகையில், வயதால் நான் முதியவனாக இருந்தாலும் இதயத்தால் இன்றும் இளமையாக உள்ளேன். திருமண வயதை எட்டிய யாரும் திருமணம் செய்துகொள்ளலாம். ரொமான்ஸ் செய்வதற்கு வயது முக்கியமில்லை” என்கிறார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Marriage, Viral