Home /News /international /

அதே சம்பளம்.. 4 நாள் வேலை செய்தால் போதும் - புதிய வேலை மாடல் சோதனை

அதே சம்பளம்.. 4 நாள் வேலை செய்தால் போதும் - புதிய வேலை மாடல் சோதனை

office

office

New Job Model | இந்த சோதனை முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் முதல் சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் வரை என அனைத்து வகையான நிறுவனங்களும் கலந்து கொள்ளலாம்.

கோவிட் வைரஸ் தொற்றால் உலகம் முழுவதிலும் ஏற்பட்ட பாதிப்பு, அலுவலகம் சென்று தான் வேலை செய்ய வேண்டும் என்ற நிலையைப் புரட்டி போட்டது. இணையத்தின் ஆதரவுடன், வீட்டில் இருந்தபடியே பெரும்பாலான ஊழியர்கள் வேலை செய்தனர். தற்போது வரை ரிமோட் வொர்க் என்பது தொடர்ந்து வரும் நிலையில், ஊழியர்களை அலுவலகம் அழைக்கலாமா அல்லது வீட்டில் இருந்தே ஹைப்ரிட் மாடலில் பணியாற்றும் திட்டத்தை செயல்படுத்தலாமா என்று பல நிறுவனங்கள் சிந்தித்து வருகின்றன.

கோவிட் பாதிப்பு முழுவதுமாக நீங்காத நிலையில், ஒரு வொர்க் மாடலை நிறுவனங்கள் அமல்படுத்த வேண்டும் கட்டாயம் உள்ளது. இந்நிலையில், உலகின் மூன்று பெரிய பல்கலைக்கழகங்கள் வேலைக்கான ஒரு ஆய்வு மாடலை வெளியிட்டுள்ளது. அதன் படி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது. அதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே.

சம்பளத்தைக் குறைக்காமல், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற ஆறு மாத கால சோதனை முயற்சியில், 70 நிறுவனங்களைச் சேர்ந்த 3000 ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த திட்டத்தில் உலகின் எந்த நாட்டிலும், எந்த நிறுவனமும் கலந்து கொள்ளலாம். இந்த சோதனை திட்டத்தை 4 டே வீக் க்ளோபல் என்ற அமைப்பு தினக் டான்க் அடானமி, 4 டே வீக் யூகே கேம்பெயின் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகம் மற்றும் பாஸ்டன் காலேஜ் ஆகியவற்றில் உள்ள ஆய்வாளர்களுடன் இணைந்து நடத்துகிறது.

ஐந்து நாட்கள் வேலை என்பது நான்கு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் 80 சதவிகித பணி நேரத்தின் அடிப்படையில் அவர்களுக்கு 100 சதவிகித ஊதியம் வழங்கப்படும். ஆனால் அவர்களுடைய வேலைத்திறனும் 100 % ஆக இருக்கும். அதாவது ஐந்து நாட்களில் அவர்கள் செய்யும் வேலை நான்கு நாட்களில் செய்யலாம் என்ற அடிப்படையில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படும்.இந்த சோதனை முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் முதல் சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் வரை வங்கி சேவைகள், நிதி சேவைகள், IT மென்பொருள் நிறுவனங்கள், சட்ட ஆலோசனை, வீட்டுவசதி, வாகன சேவைகள், ஆன்லைன் சில்லறை விற்பனை, ஹோம் கேர், ஸ்கின் கேர், அனிமேஷன் ஸ்டுடியோக்கள், கட்டிடம் மற்றும் கட்டுமான ஆட்சேர்ப்பு சேவைகள், உணவு சேவைகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், உள்ளிட்ட அனைத்து வகையான நிறுவனங்களும் கலந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் பணியாற்றும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் பெர்ஃபார்மன்ஸ் உடல் நலம், மனநலம் ஆகியவற்றை இந்த ஆய்வாளர்கள் அளவிடுவார்கள்.

Also Read : பணியிடத்தில் மோசமான அனுபவத்தை பெறும்போது உங்கள் மனநலனை நிர்வகிக்க டிப்ஸ்..!

பாஸ்டன் காலேஜின் சமூகவியல் பேராசிரியரும், பைலட்டின் மூத்த ஆராய்ச்சியாளருமான ஜூலியட் ஷோர், “மன அழுத்தம் மற்றும் சோர்வு, வேலை மற்றும் வாழ்க்கையில் அதிருப்தி, உடல்நலம், தூக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், கூடுதல் விடுமுறை நாள் வழங்கப்படுவதன் மூலம் ஊழியர்களிடம் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதை நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம்” என்று கூறினார்.

Also Read : பெண்கள் ஏன் அலுவலக பாலியல் தொந்தரவு பற்றி புகார் தெரிவிக்க முன்வருவதில்லை?

4 டே வீக் குளோபல் அமைப்பின் தலைமை நிர்வாகியான ஜோ ஓ'கானர் "வாரத்தில் நான்கு நாட்கள் தான் வேலை என்ற திட்டத்தின் பின்னால் இங்கிலாந்து அதிவேகமாக செயல்பட்டு வருகிறது.  தொற்றுநோய் பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வரும் நேரத்தில், புதிய போட்டிகள் உருவாகியுள்ளன. அதிலே, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, குறைந்த வேலை நேரம், அதிக பெர்ஃபார்மான்ஸ் ஆகியவற்றை மையமாகக் கொண்ட வேலையே அனைவருக்கும் போட்டித்தன்மையை வழங்குவதற்கான கருவி என்பதையும் பல நிறுவனங்கள் அங்கீகரிக்கின்றன” என்று நான்கு வார வேலை நாள் என்ற திட்டம் எவ்வாறு பயனடையும் என்று தெரிவித்தார்.

Also Read : உங்கள் வேலை மட்டுமல்ல... உலக அளவில் உள்ள மிகவும் மன அழுத்தமான வேலைகளை பற்றி தெரியுமா..?

ஊழியர்களின் செயல்திறன் மட்டுமல்லாமல், நிறுவனம் மற்றும் சுற்றுசூழலுக்கும் இந்த கூடுதல் ஒரு நாள் விடுமுறை பயனளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நான்கு வார சோதனை முயற்சியின் முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Job

அடுத்த செய்தி