Home /News /international /

தாய்லாந்தில் பயங்கரம்; 17 இடங்களில் வெடிகுண்டு, தீவைத்து தாக்குதல்

தாய்லாந்தில் பயங்கரம்; 17 இடங்களில் வெடிகுண்டு, தீவைத்து தாக்குதல்

தாக்குதலுக்கு உள்ளான பகுதி

தாக்குதலுக்கு உள்ளான பகுதி

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் தாய்லாந்து அரசு தாக்குதல் குறித்து விசாரித்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தாய்லாந்தில் நள்ளிரவில் திரென பல இடங்களின் குண்டு வெடிப்பு மற்றும் தீ வைப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர் என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

    தாய்லாந்து நாட்டில் தெற்கு மாகாணங்களான பட்டாணி, யால, நாராதிவாட் மற்றும் சோங்க்லா பகுதியில் திடீரென நள்ளிரவில் 17 இடங்களில் வெடிகுண்டு மற்றும் தீ வைப்பு தாக்குதல் நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறிப்பாக சூப்பர் மார்க்கெட் கடைகள் மற்றும் காஸ் ஸ்டேஷன் இடங்களில் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 7 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்று தாய்லாந்து நாட்டு போலீஸ் மற்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

    தாக்குதலுக்கு உள்ளான பகுதி


    இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் தாய்லாந்து அரசு தாக்குதல் குறித்து விசாரித்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் 2004இல் இருந்து பல தாக்குதல் நடந்துள்ளது. தெற்கு தாய்லாந்து பகுதி மாகாணங்கள் மலேசியா எல்லையை ஒட்டியுள்ளது. இந்த பகுதியில் உள்ள முஸ்லீம் மாகாணங்களான பட்டாணி, யால, நாராதிவாட் மற்றும் சோங்க்லா பகுதியில் உள்ள சில குழுக்கள் விடுதலை வேண்டி தாய்லாந்து அரசை எதிர்த்து அவ்வப்போது சிறிய தாக்குதல்கள் நடத்துவர். அப்படி நடத்தப்பட்ட தாக்குதல்களில்  7300 பேர் இறந்துள்ளனர் என்று டீப் சவுத் வாட்ச் குழு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Also Read: என்னையா கடிக்கிற? சாவு... தன்னை கடித்த பாம்பை பதிலுக்கு கடித்து கொன்ற 2 வயது பெண் குழந்தை!

    பாரிசான் ரெவலூசி நேஷனல் என்ற கிளர்ச்சி குழுவுடன் தாய்லாந்து அரசு இரண்டு ஆண்டு கழித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த தாக்குதல் சம்பவம் அந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பதானி ஐக்கிய விடுதலை அமைப்பு மற்றும் இதர அமைப்புகளுடன் தாய்லாந்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    தாக்குதலுக்கு உள்ளான பகுதி


    பதானி ஐக்கிய விடுதலை அமைப்பின் தலைவர் கஸ்தூரி மகோத தற்போது நடந்த தாக்குதலுக்கும் அமைப்பிற்கும் சம்பந்தம் இல்லையென்று தெரிவித்துள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Bomb blast, Thailand

    அடுத்த செய்தி