முகப்பு /செய்தி /உலகம் / புதிதாக 7 ஆயிரம் தீவுகள் கண்டுபிடிப்பு.. குட்டி நாடான ஜப்பானில் இத்தனை தீவுகளா?

புதிதாக 7 ஆயிரம் தீவுகள் கண்டுபிடிப்பு.. குட்டி நாடான ஜப்பானில் இத்தனை தீவுகளா?

தீவுகள்

தீவுகள்

Japan island | ஜப்பானில் புதிதாக 7 தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, Indiajapanjapan

கடுமையான நிலவியல் அமைப்பை கொண்ட ஜப்பானியா்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக 7 ஆயிரம் தீவுகளை கண்டுபிடித்துள்ளனா்.

பொதுவாக உலக நாடுகள் நலிந்த நாடுகள், வளரும் நாடுகள், வளா்ந்த நாடுகள் என மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்தியா போன்றவை வளரும் நாடுகள் எனவும் அமொிக்க உள்ளிட்ட மிகச் சில நாடுகள் வளா்ந்த நாடுகளாகவும் பார்க்கப்படுகின்றன. அவற்றுள் குட்டி நாடான ஜப்பானும் ஒன்று.

இயற்கை போிடா்களை அதிகம் சந்திக்காத இந்தியா போன்ற நாடுகளுக்கு முற்றிலும் மாறான நிலவியல் அமைப்பை கொண்டது ஜப்பான். அங்கு சுனாமியெல்லாம் சர்வசாதாரணம். அதிகப்படியான நிலநடுக்கம், அதிகப்படியான எாிமலை வெடிப்பு என இயற்கை சீற்றங்கள் ஒருபுறம். ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பு பேரழிவுகளின் தாக்கம் மறுபுறம் என வாழ்நாள் முழுவதும் சவால்களை சந்தித்துவரும் ஜப்பானியா்கள் உழைப்பால் உயா்ந்திருக்கிறாா்கள்.

சமவெளிகள், மலை முகடுகள். நீா் பரப்பு என அனைத்தையும் சாிவர பெறப்பட்ட நாடுகளை விட இயற்கை போிடா்களை அதிகம் சந்திக்கும் ஜப்பான் போன்ற குட்டி நாடுகளுக்கு. மனித குலம் வாழத்தேவையான நிலப்பரப்பு என்பது இன்றியமையாதது.

இந்த பின்னணியில் ஜப்பானியா்களுக்கு தித்திக்கும் செய்தியாக வந்துள்ளது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 7 ஆயிரம் தீவுகள். ஆம் கடந்த 1987 ஆம் ஆண்டு ஜப்பான் கடலோரக் காவல் படையின் கணக்கெடுப்பின் படி அந்நாட்டில் அதிகாரப்பூா்வ பயன்பாட்டில் இருந்த தீவுகளின் எண்ணிக்கை 6852. அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 97 சதவீதம் 4 பொிய தீவுகளால் ஆனது. ஜப்பானியா்கள் தீவுகளை தங்கள் நாட்டின் வளா்ச்சிக்காக திட்டமிட்டு பயன்படுத்துகின்றனா்.

விமான நிலையங்கள் சமவெளிகளில் இருப்பதைத்தான் பாா்த்திருப்போம் ஆனால் ஜப்பானில் கன்சாய் மாகாணத்தில் ஒசாகா கடல்பகுதியில் உள்ள ஒரு தீவில் ஜப்பானியா்கள் பன்னாட்டு விமானநிலையத்தையே கட்டமைத்துள்ளனா். 1994 ஆம் ஆண்டு முதல் இந்த பன்னாட்டு விமான நிலையம் செயல்பாட்டில் உள்ளது. தீவுகளை வா்த்தக ரீதியாக வளா்த்தெடுக்க கடலுக்கு அடியில் தீவுகளை இணைக்கும் பாலம், கடலுக்கு அடியில் TUBE TRAIN, தொழிற்சாலைகள். வானுயா்ந்த கட்டங்கள் என கலக்கி வருகின்றனா்.

ஜப்பானியா்களின் வாழ்வில் தீவுகள் இத்தனை முக்கியத்துவம் பெற்றிருக்கும் நிலையில் அந்நாட்டின் GSI எனும் அமைப்பு மேற்கொண்ட கணக்கெடுப்பின் படி புதிதாக 7 ஆயிரம் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறது ஜப்பான் அரசு. தீவுகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டம் போட தொடங்கிவிட்டது.

மனித குல வளா்ச்சிக்கு நிலம் எத்தனை முக்கியம் என்பதற்கு ஜப்பானுக்கு கிடைத்த ஜாக்பாட்டே சான்றாகவே அமைந்துள்ளது இந்த நிகழ்வு.

First published:

Tags: Island, Japan