திருமண நிகழ்வில் நடந்த துயரம் - குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழப்பு

"தாலிபான் தவிர ஐ.எஸ். அமைப்பினரும் சில ஆயுதமேந்திய இயக்கங்களும் தாக்குதல் நடத்திவருகின்றன"

news18
Updated: August 18, 2019, 11:13 AM IST
திருமண நிகழ்வில் நடந்த துயரம் - குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழப்பு
குண்டுவெடிப்பு நடந்த இடம் (Image: Reuters)
news18
Updated: August 18, 2019, 11:13 AM IST
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 182 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தாலிபான் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலை நடத்தி வருகின்றனர். அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியாக அமெரிக்க அரசு மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. தாலிபான் தவிர ஐ.எஸ். அமைப்பினரும் சில ஆயுதமேந்திய இயக்கங்களும் தாக்குதல் நடத்திவருகின்றன.

சில இயக்கங்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உதவி செய்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு நடந்தது. இதில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடையருகே வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.


இந்த வெடிகுண்டு தாக்குதலில் விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள், குழந்தைகள் என சுமார் 63-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 182 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இதனால், உயிரிழப்பு மேலும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

First published: August 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...