அமெரிக்காவில் 61 வயது இந்தியரை சுட்டுக் கொன்ற 16 வயது சிறுவன்

சுனில் எட்லாவை சுட்டுக் கொன்ற சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர். அச்சிறுவன் எதற்காக எட்லாவை சுட்டுக் கொன்றார் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.

அமெரிக்காவில் 61 வயது இந்தியரை சுட்டுக் கொன்ற 16 வயது சிறுவன்
உயிரிழந்த சுனில் எட்லா
  • News18
  • Last Updated: November 18, 2018, 9:49 PM IST
  • Share this:
அமெரிக்காவில் 61 வயது இந்தியர் ஒருவர் 16 வயது சிறுவனின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகியுள்ளார்.

தெலங்கானாவின் மேதக் பகுதியைச் சேர்ந்த சுனில் எட்லா (61), அமெரிக்காவின் அட்லாண்டிக் கிளப் பகுதியில் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 15-ம் தேதி இரவுப் பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தபோது, 16 வயது சிறுவனால் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

1987-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்துவரும் சுனில் எட்லா, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக இந்தியா வர திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் கொல்லப்பட்டது குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுனில் எட்லாவை சுட்டுக் கொன்ற சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர். அச்சிறுவன் எதற்காக எட்லாவை சுட்டுக் கொன்றார் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.


Also watch

First published: November 18, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading