சீனாவில் கோர தாண்டவமாடும் கொரோனா தொற்றால் இதுவரை அந்நாட்டில் 90 கோடி பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தொற்று பாதிப்புக்குள்ளான 90 கோடி பேரில், ஒரு கோடி பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடிகளின் ஆற்றல் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சீன மருத்துவமனைகளில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து திறந்தவெளியில் சடலங்கள் தகனம் செய்யப்படும் நிலை ஏற்பட்டது.
இதனிடையே, சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா பாதிப்பிற்கு 60 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை 60,000 பேர் உயிரிழந்ததாகவும் , அதில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் 65 வயதுக்கு மேலானவர்கள் எனத் தெரிய வந்தது. மேலும், 5,503 பேர் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, Corona, Corona death, CoronaVirus, Covid-19