முகப்பு /செய்தி /உலகம் / தைவான் நிலநடுக்கம்: 600 மீட்டர் பாலம் இடிந்து விழுந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரல்!

தைவான் நிலநடுக்கம்: 600 மீட்டர் பாலம் இடிந்து விழுந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரல்!

நிலநடுக்கத்தில் சேதம் அடைந்த பாலங்கள்

நிலநடுக்கத்தில் சேதம் அடைந்த பாலங்கள்

6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 600 மீட்டர் பாலம் இடிந்து விழுந்து சேதம் அடைந்த காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தைவானில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 600 மீட்டர் அளவிலான அழகிய சுற்றுலாத் தளங்களை இணைக்கும் வகையில் உள்ள கவோலியாவ் பாலம் இடிந்து விழுந்தது. இது தொடர்பான அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது.

தைவான் நாட்டின் தென்கிழக்கு கடலோர பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. சில வினாடிகள் மட்டுமே இந்த நிலநடுக்கம் நீடித்திருந்தாலும், சிஸ்ஹேங் மற்றும் யாலி நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் போன்ற கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சத்தில் கட்டிடங்களை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்குத் தஞ்சம் அடைந்தனர்.

இன்ஸ்டாவில் வெளியான வீடியோவில் , தைவானில் உள்ள 600 மீட்டர் நீளமுள்ள பாலம் இடிந்து கிடப்பதை drone கேமிராக்கள்  காட்சிப்படுத்தின. இதோடு பாலத்தின் முழு அளவையும் வீடியோவில் காட்டும் போது நீர்நிலைகள் மற்றும் அழகிய நிலப்பரப்பின் காட்சிகளையும், பாலம் எந்தளவிற்குச் சேதமாகியுள்ளதையும் என்பதையும் பார்க்க முடிந்தது.




 




View this post on Instagram





 

A post shared by CNN (@cnn)



பார்ப்பதற்கே வியப்போடு அழகையும் தன் வசம் கொண்டிருக்கும் இந்த பாலம், பல சுற்றுலா தளங்களை இணைக்கும் வகையிலும் அமைந்துள்ளது தான் இதன் கூடுதல் சிறப்பு. இத்தகைய சிறப்பு வாய்ந்த இப்பாலம் இடிந்து விழுந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகிறது. இதுபோன்ற பல சிறப்பு மிக்க கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் வானிலை மையம் இந்த நிலநடுக்கத்தையடுத்து தைவானை ஒட்டிய அந்நாட்டின் தென்பகுதி தீவுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் திரும்பப் பெற்றது.

Also Read : தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவு - அதிர்வில் குலுங்கிய ரயில் மற்றும் சரிந்த கட்டிடங்கள்

மேலும் தைவானைப் புரட்டிப் போட்ட இந்த நிலநடுக்கத்தால் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் 1999ல் 7.3 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மற்றும் கடந்த 2016ல் தெற்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Earthquake, Viral Video