முகப்பு /செய்தி /உலகம் / பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவு..!

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவு..!

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்

Philippines earthquake : பிலிப்பைன்ஸில் இன்று காலை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • international, IndiaPhilippines Philippines

பிலிப்பைன்ஸின் தென் பகுதியை இன்று ( 07.03.2023 ) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது. மிண்டனாவ் தீவில் தாவோ டி ஓரோ மாகாணம் அருகே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் பூமிக்கு அடியில் 8 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனால் அப்பகுதியில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்டத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளதாகவும் ஆங்காங்கே சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : காவலர்கள் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்... 9 காவலர்கள் பலி

முக்கிய நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் இல்லாமல் சேதங்களைச் சரிசெய்யச் சிறிது தாமதமாகுவது தெரிகிறது. மேலும் கடந்த வாரம் இது போன்ற நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து, நேற்றும் கூட நில அதிர்வு ஏற்பட்டதாகவும் அந்நாட்டுப் புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Earthquake, Philippines