Home /News /international /

ஆப்கானிஸ்தான் பள்ளிகளில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு - 6 பேர் பலி, பலர் படுகாயம்

ஆப்கானிஸ்தான் பள்ளிகளில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு - 6 பேர் பலி, பலர் படுகாயம்

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு

Afghanistan Bomb Blast | ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா பிரிவு மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆப்கானிஸ்தானில் உள்ள மேற்கு காபூல் நகரில் பள்ளியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஆறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 11க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தர்.இந்த தகவலை ஆப்கானிஸ்தான் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக காபூல் காவல்துறை செய்தி தொடர்பாளர் காலித் சத்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில், " இந்த தாக்குதல் அப்துல் ரஹிம் சாஹித் உயர் நிலை பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதில் நமது ஷியா பிரிவு சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார். இந்த தாக்குதலின் போது மாணவர்களை குறிவைத்து கிரனேடுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், சன்னி மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஆப்கானிஸ்தானில் ஷியா மக்களை குறிவைத்து தாக்குதல் நடைபெறுவது வழக்கம். இந்த தாக்குதலும் ஷியா மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தான் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்களின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அமெரிக்க படையினர் வெளியேற்றத்தின் பின் அந்நாட்டின் ஜனநாயக ஆட்சி அகற்றி கடந்தாண்டு தாலிபான் ஆட்சியை நிறுவியது. தங்கள் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பாக இருக்கும் தாலிபான்கள் தொடர்ந்து கூறிவந்தாலும், அந்நாட்டில் ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. ஷியா பிரிவு மக்களை குறிவைத்து ஐஎஸ் - கே அமைப்பு தொடர்ந்து தாக்குதலை நடத்திவருகிறது.

    Also Read : குடும்ப உறுப்பினர்கள் பலர் நீக்கம் - 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை நியமித்த இலங்கை அதிபர்

    இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாது அண்டை நாடான பாகிஸ்தானிலும் நடைபெறுவதால் இரு நாடுகளுக்கு இடையே இது மோதலை ஏற்படுத்துகிறது. பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் சமீபத்தில் இரு ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்தனர்.

    பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக ஆப்கான் எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவம் எதிர்த்தாக்குதல் நடத்தியது. இதில் ஆப்கான் பொதுமக்கள் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது ஆப்கானில் பதற்றமான சூழலை உருவாக்கிய நிலையில், பாகிஸ்தான் அரசு இது போன்ற செயல்களை தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தாலிபான் அரசு எச்சரித்துள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Afghanistan

    அடுத்த செய்தி