முகப்பு /செய்தி /உலகம் / ஜப்பானில் நிலநடுக்கம்.. கட்டடங்கள் குலுங்கியதால் அலறியடித்த மக்கள்!

ஜப்பானில் நிலநடுக்கம்.. கட்டடங்கள் குலுங்கியதால் அலறியடித்த மக்கள்!

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் நிலநடுக்கம்

Japan Earthquake : ஜப்பானில் ஹொக்கைடோ தீவுப்பகுதியில் 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • international, IndiaJapanJapan

ஜப்பானில் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய தீவுப்பகுதியான ஹொக்கைடோ பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்க ஏற்பட்டுள்ளது. நிலநடுக்க அதிர்வைத் தொடர்ந்து சுனாமி ஏற்படவாய்ப்பு இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் கடல் பகுதியில் இருந்து 60 கிமீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஜப்பானின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்வு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகள் நிலநடுக்க ஏற்படுகிறது. மேலும் இன்று துருக்கி மத்திய பகுதியில் நிலநடுக்க ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கி மற்றும் சிரியா நாடுகளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் இருநாடுகளும் பெரும் சேதத்தை கண்டுள்ளனர். இதுவரை வெளிவந்த தகவலில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Also Read : துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்.. தொடரும் சோகம்.. அச்சத்தில் பொதுமக்கள்!

சுமார் 5.2 லட்சம் குடியிருப்புகளைக் கொண்ட 1.6 லட்சம் கட்டங்கள் சேதமடைந்து பாதிப்புகளைக் கண்டுள்ளது.துருக்கி அரசு அளித்த தகவலின் படி, சுமார் 8.65 லட்சம் பேர் கூடாரங்களிலும், 23,500 பேர் கண்டெய்னர் வீடுகளிலும், 3.76 லட்சம் பேர் டார்மெட்டரி அல்லது பொது வசிப்பிடங்களிலும் தற்போது அடைக்கலம் புகுந்துள்ளனர். எனவே, சுமார் 15 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிப்பதாகத் துருக்கி அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

First published:

Tags: Earthquake, Japan