அமெரிக்காவில் முதியவரைத் தள்ளிவிட்ட இரு போலீசார் இடைநீக்கம் - எதிர்ப்பு தெரிவித்து 57 போலீசார் ராஜினாமா?

அமெரிக்காவில் முதியவரைத் தள்ளிவிட்ட இரு போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவசர கால படைப்பிரிவிலிருந்து 57 போலீசார் ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் முதியவரைத் தள்ளிவிட்ட இரு போலீசார் இடைநீக்கம் - எதிர்ப்பு தெரிவித்து 57 போலீசார் ராஜினாமா?
தள்ளிவிடப்படும் முதியவர் (படம்: Reuters)
  • Share this:
அமெரிக்காவின் பஃபல்லோ நகர காவல்துறையின் அவசர கால படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இருவர் 75 வயதான மார்ட்டின் குஜினோ என்பவரை கீழே தள்ளி விடும் வீடியோ இரு நாட்களுக்கு முன் வெளியானது. பலத்த காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவசர கால படைப்பிரிவைச் சேர்ந்த 57 அதிகாரிகளும் ராஜினாமா செய்துள்ளனர்.

அதிகாரிகள் இட்ட கட்டளையை மட்டுமே தாங்கள் நிறைவேற்றியதாகவும், அதற்காக தங்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், 57 அதிகாரிகளும் காவல்துறையில் இருந்து ராஜினாமா செய்யவில்லை என்றும், அவசர கால படைப்பிரிவில் இருந்து மட்டுமே விலகியுள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.


Also see:
First published: June 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading