ஹோம் /நியூஸ் /உலகம் /

பாட்டி cum அம்மா: மகன் குழந்தையை கருவில் சுமக்கும் தாய்

பாட்டி cum அம்மா: மகன் குழந்தையை கருவில் சுமக்கும் தாய்

கணவர் ஜேசனுடன் 56 வயதான நான்சி

கணவர் ஜேசனுடன் 56 வயதான நான்சி

அமெரிக்காவில் மாமியார் ஒருவர் தனது மகன் மற்றும் மருமகளுக்காக கர்ப்பமடைந்து தனது பேரக் குழந்தையை தானே பெற்றெடுக்கவுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaUtahUtahUtahUtah

  உலகத்தில் இதுவரை நடந்திராத விசித்திரமான சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி நம்மை ஆச்சரியத்திற்கு ஆளாக்கும். அதுவும் இன்றைய அறிவியல் வளர்ச்சி பெற்ற தொழில்நுட்ப யுகத்தில் நினைத்து பார்க்க முடியாத பல விஷயங்களும் சாத்தியமாகி வருகின்றன.

  இது போன்ற ஒரு விநோதா சம்பம் ஒன்று அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. நமது நாட்டில் 20-30 ஆண்டுகளுக்கு முன்னர் மாமியாரும், மருமகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்து குழந்தை பெற்ற சம்பவங்கள் எல்லாம் கூட நடந்துள்ளது. ஆனால், அமெரிக்காவில்  தாய் ஒருவர் தனது மகன் மற்றும் மருமகளுக்காக கர்ப்பமடைந்து தனது பேரக் குழந்தையைதானே பெற்றெடுக்கவுள்ளார்.

  அந்த பெண்ணின் பெயர் நான்சி ஹாவுக். அமெரிக்காவின் உடாஹ் பகுதியில் வசிக்கும் 56 வயதான நான்சிக்கு, 32 வயதில் ஜெஃப் என்பவர் மகனாக உள்ளார். ஜெஃப்புக்கு கேம்பிரியா என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. ஜெஃப் - கேம்ப்ரியா தம்பதிக்கு முதல் மகப்பேற்றின் போது வேரா மற்றும் அவ்யா என்ற இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். தற்போது இந்த இரட்டையர்களுக்கு 3 வயது. இந்நிலையில், அடுத்த இரண்டாண்டுகளில் கேம்ப்ரியா மீண்டும் கர்ப்பமாகி டீசல் மற்றும் லூகா என்ற இரட்டையரை பெற்றெடுத்துள்ளார்.

  இரண்டு இரட்டையரை பெற்றெடுத்த கேம்ரியாவுக்கு உடல் நலிவுற்ற நிலையில், வேறு வழியின்றி கர்ப்பப்பை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மருத்துவரின் ஆலோசனை பேரில் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையை மேற்கொண்டார் கேம்பரியா. இந்நிலையில், ஜெஃப், கேம்பரியாவுக்கு மேலும் குழந்தைகள் பெற வேண்டும் என ஆசை இருந்துள்ளது. கேம்ரியாவுக்கு கருப்பை இல்லாததால் கருத்தரிக்க முடியதா நிலை. எனவே, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற இருவரும் முடிவெடுத்துள்ளனர்.
   
  View this post on Instagram

   

  A post shared by Nancy Hauck (@nancyhauck)  இந்த சூழலில் தான் ஜெஃப்பின் தாய் நான்சி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். தனது மகன், மருமகளுக்காக தானே வாடகைத்தாயாக மாற அவர் முன்வந்துள்ளார். இதை தனது மகன் ஜெஃப்பிடம் கூறிய போது, அவன் அதிர்ச்சி அடைந்ததாக கூறும் நான்சி, நான் எனது மகனுக்கு எப்படியாவது துணை நிற்க வேண்டும் என்ற இந்த முடிவை எடுத்தேன் என்றார். இந்த முடிவுக்கு தனது கணவர் ஜேசன், அதாவது ஜெஃப்பின் தந்தையும் துணை நின்றதாக நான்சி கூறியுள்ளார்.

  இதையும் படிங்க: பொம்மை வீடு கட்டி கொடுத்த தந்தை..குதுகலமாக விளையாடும் குழந்தையின் க்யூட் வீடியோ வைரல்

  56 வயதான நான்சி தற்போது மகனின் குழந்தையை வயிற்றில் சுமந்து வருகிறார். இப்படிப்பட்ட தன்னலமற்ற தாயை நான் அடைந்ததற்கு நன்றிக்கடன் பெற்றுள்ளேன் என்கிறார் ஜெஃப்.

  தனது மகனின் குழந்தையை கருவில் சுமக்கும் நான்சி அந்த குழந்தைக்கு ஒரு வகையில் தாயாகவும் இருக்கிறார், பாட்டியாகவும் இருக்கிறார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Pregnancy, Pregnant, Viral News