ஹோம் /நியூஸ் /உலகம் /

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்... 56 பேர் பலி, 300-க்கும் மேற்பட்டோர் காயம்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்... 56 பேர் பலி, 300-க்கும் மேற்பட்டோர் காயம்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

Indonesia Earrthquake | பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.4 பதிவாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தோனேசியாவின் ஜகர்தாவில் ஏற்பட்ட நிலநடுக்கில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

  தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று தான் இந்தோனேசியா தீவு. இந்த தீவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இந்தோனேசியாவில் இன்று மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

  மேற்கு ஜாவா மாகாணத்தின் சியான்ஜூரை (Cianjur) மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.4 பதிவாகியுள்ளது.

  Also Read : ஒரு மணி நேரத்திற்கு 10 வெடிப்புகள்.. நிலநடுக்கத்தால் சீறிய இரண்டு எரிமலைகள்!

  இதன் காரணமாக பல வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவன கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Published by:Vijay R
  First published:

  Tags: Earthquake, Earthquake in Indonesia