ஹோம் /நியூஸ் /உலகம் /

கல்லறையும் ஒரு கலைப்பொருள்தான்..! - 200 இறுதிச்சடங்குகளில் பங்கேற்ற பிரிட்டிஷ் பெண்

கல்லறையும் ஒரு கலைப்பொருள்தான்..! - 200 இறுதிச்சடங்குகளில் பங்கேற்ற பிரிட்டிஷ் பெண்

ஜீன் டிரெண்ட்-ஹில்

ஜீன் டிரெண்ட்-ஹில்

55 வயதான பிரிட்டிஷ் பெண் ஒருவர் கல்லறைக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaLondonLondonLondon

  ஜீன் டிரெண்ட்-ஹில் என்ற 55 வயது பிரிட்டிஷ் நாட்டுப் பெண் இதுவரை உலகத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட கல்லறைகளுக்குச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

  லண்டன் நகரில் உள்ள இஸ்லிங்டன் என்ற பகுதியில் வசிக்கும் அவர் இதுவரை யாரென்று தெரியாத 200 நபர்களின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2012இல் அவர் ஒரு நாள் ஆலயத்திற்குச் செல்லும் போது தெரியாமல் ஒருவர் மேல் காரினால் மோதியுள்ளார். அந்த தருணத்தில் இருந்து அவர் கல்லறைக்குச் செல்ல தொடங்கியுள்ளார்.

  ஜீன் டிரெண்ட்-ஹில் 13 வயதில் தனது தந்தை இழந்துள்ளார். மேலும் அவரின் 20 வயதில் தாயாரும் இறந்துள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் கல்லறைகளுக்கு சென்று வந்துள்ளார். 2012ம் ஆண்டு நடந்த அந்த நிகழ்விற்கு பின்பு அதனை வழக்கமாகவே கொண்டுள்ளார்.

  அதனைத் தொடர்ந்து, அவரின் வீட்டின் அருகில் உள்ள கல்லறையில் உள்ள நபர் அவரை அனாதையாக இறப்பவரின் இறுதிச் சடங்கிற்கு அழைத்துள்ளார். அந்த தருணத்திலிருந்து அனாதையாக இறப்பவர்களின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொண்டு வருகிறார். மேலும் அதனை நினைத்துத் தான் பெருமைப் படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

  Also Read : குப்பைகளுக்கு தீ வைப்பு.. நொறுக்கப்பட்ட வாகனங்கள்! விலைவாசி உயர்வால் போர்க்களமான பாரிஸ்!

  சிறிய வயதிலிருந்து அவருக்கு இறப்பு குறித்து ஒரு ஆர்வம் இருந்துள்ளது என்ற காரணத்தினால் கல்லறைக்குச் செல்வதை வழக்கமாகவே கொண்டுள்ளார். மேலும் கல்லறைகளை ஒரு கலைப்பொருளாகப் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் எல்லாருக்கும் ஒரு கதை உள்ளது. ஒருவர் இறக்கும் போது அவர்களை நினைவு கொள்வதற்கு ஒருவர் வேண்டும் அதனைத் தான் நான் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Janvi
  First published:

  Tags: Funeral, Woman