ஐ.நா.வில் இனவாதம் பற்றி விவாதிக்க அழைப்பு விடுக்கும் ஆப்பிரிக்க நாடுகள்

ஐ.நா.வில் இனவாதம் பற்றி விவாதிக்க 54 ஆப்பிரிக்க நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

ஐ.நா.வில் இனவாதம் பற்றி விவாதிக்க அழைப்பு விடுக்கும் ஆப்பிரிக்க நாடுகள்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் முகக்கவசத்துடன் போராடும் பெண். (படம்: Reuters)
  • Share this:
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் எனும் கறுப்பினத்தவர் வெள்ளையின காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுக்க இனவாதத்துக்கு எதிரான குரல்கள் வலுவடைந்துள்ளன. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலிடம் கறுப்பினத்தவர் பிரச்னைகள் பற்றி விவாதிக்க வேண்டும் என ஆப்பிரிக்க நாடுகள் கோரியுள்ளன.

54 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு ஐ.நாவின் உயர்மட்டத்துக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளனர். அதில் இனவாத அடிப்படையிலான மனித உரிமை மீறல்கள், காவல்துறை அத்துமீறல்கள், போராட்டங்களில் வன்முறையை ஏவுதல் முதலானவை பற்றி உடனடி விவாதம் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் தடைப்பட்ட 43வது கவுன்சில் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும்போது இவ்விவாதம் தொடங்கப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஜார்ஜ் ஃபிளாய்டின் உயிரிழப்பு பற்றி கூறும்போது, துரதிருஷ்டவசமாக இதுவொரு தனித்த நிகழ்வல்ல; கட்டுப்பாடற்ற காவல்துறையின் மிருகத்தனத்தால், நிராயுதபாணியாக இருக்கும் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சார்ந்தோர் பலருக்கும் இதேபோல் நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also see:

மேலும், இன அடிப்படையில் அமெரிக்காவில் நிலவும் சமத்துவமின்மை, பாகுபாடு ஆகியவற்றுக்கு தற்போது உலகமெங்கும் நடைபெற்றுவரும் போராட்டங்கள் சாட்சி பகர்கின்றன என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.முன்னதாக, ஜார்ஜ் ஃபிளாய்டின் குடும்பத்தினர், போலீஸ் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட பிற மக்கள், 600க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் சேர்ந்து இனவாதம் குறித்தும் காவல்துறையின் நடவடிக்கை குறித்தும் விவாதம் வேண்டும் என ஐ.நா.வில் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
First published: June 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading