• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • 2018-ல் மட்டும் 53 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்!

2018-ல் மட்டும் 53 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்!

representative image

representative image

சர்வதேச அளவில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சர்வதேச அளவில் கடமையைச் செய்த பத்திரிகையாளர்கள் 53 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என சர்வதேச பத்திரிகையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச அளவில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தச் சங்கம், சர்வதேச அளவில் 34 பத்திரிகையாளர்கள் பழி வாங்கும் நடவடிக்கையிலேயே கொல்லப்பட்டுள்ளார்கள் எனக் கூறுகிறது.

மேலும் அந்த அறிக்கையில், ‘கடந்த டிசம்பர் 14-ம் தேதி வரையில் மொத்தம் 53 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பழிவாங்குவதற்காக 34 பத்திரிகையாளர்கள் பலியானது 2018-ன் அறிக்கை. ஆனால், 2017-ல் இந்த எண்ணிக்கை 17 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. பல பத்திரிகையாளர்கள் தங்கள் பணியிட அபாயங்களாலும் மரணமடைந்துள்ளனர். உலகிலேயே ஆஃப்கானிஸ்தானில் மட்டும் 13 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 2-ம் தேதி கொலை செய்யப்பட்ட சவுதி அரேபியாவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் கஷோகியின் படுகொலை சர்வதேச அளவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2017-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்கிறது பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் அறிக்கை.

மேலும் பார்க்க: குஜராத்தில் 625 கோடி ரூபாய் மின்கட்டணம் தள்ளுபடி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: