ஹோம் /நியூஸ் /உலகம் /

52 வயது பெண்ணை விழுங்கிய பாம்பு.. வயிற்றில் இருந்து உடல் மீட்பு!

52 வயது பெண்ணை விழுங்கிய பாம்பு.. வயிற்றில் இருந்து உடல் மீட்பு!

52 வயது பெண்ணை விழுங்கி கொன்ற மலைப்பாம்பு

52 வயது பெண்ணை விழுங்கி கொன்ற மலைப்பாம்பு

52 வயது பெண்ணை 22 அடி மலைப்பாம்பு விழுங்கி கொன்ற அதிர்ச்சி சம்பவம் இந்தோனேசியாவில் அரங்கேறியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaJakarta Jakarta Jakarta

  ராட்ச பாம்புகள் மனிதர்கள்  விழுங்கி சாப்பிடும் நிகழ்வுகளை அனகொண்டா போன்ற திரைப்படங்களில் பார்த்துள்ளோம். ஆனால் இதுபோன்ற  அதிர்ச்சிக்குரிய உன்மை சம்பவம் இந்தோனேசியாவில் நடைபெற்றுள்ளது. இந்தோனேசியா அடர் மழை காடுகள் கொண்ட நாடாகும். எனவே, அங்கு விவசாய மற்றும் தோட்ட தொழில் பெரும்பான்மை வேலையாக உள்ளது. தற்போது ரப்பர் தோட்ட விவசாயம் அங்கு பிரதான தொழிலாக உள்ளது.

  அந்நாட்டின் ஜம்பி என்ற பகுதியில் ஜாஹ்ரா என்ற 52 வயது பெண்மணி ரப்பர் மரம் வெட்டும் தொழிலாளி ஆவார். கடந்த வாரம் அவர் தனது அன்றாட வேலைக்கு சென்ற ஜாஹ்ரா  வீடு திரும்பவில்லை. இதனால் ஜாஹ்ராவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் காட்டுப்பகுதியில் தேடி பார்த்து போலீசாரிடமும் புகார் தந்துள்ளனர்.

  மனைவி கிடைக்காத நிலையில், அடுத்த நாளும் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தேடிய போது அங்கு ஒரு 22 அடி ராட்ச மலைப்பாம்பு பெரிய வயிற்றுடன் தென்பட்டுள்ளது. அவர்களுக்கு சந்தேகம் வரேவ அந்த பகுதியை சுற்றி தேடியுள்ளனர். அப்போது ஜாஹ்ராவின் உடைகள் மற்றும் உடமைகள் அங்கு சிதறியிருந்துள்ளது.

  ஒருவேளை அந்த பெண்ணை பாம்பு தான் விழுங்கி இருக்குமோ என கணவருக்கும் கிராமத்தினருக்கும் சந்தேகம் வலுவடைந்ததது.

  இதையும் படிங்க: தண்ணீல கண்டம்.. 60 ஆண்டுகள் குளிக்காமல் இருந்த முதியவர்.. குளித்த சில நாளில் உயிரிழந்த சோகம்

  இதனால் கிராமத்தினர் சேர்ந்து அந்த பாம்பை கொன்று வயிற்றை கிழித்து பார்த்துள்ளனர். அதில் பெண்ணை அந்த ராட்ச பாம்பு விழுங்கியது உறுதியாகியுள்ளது. வயிற்றில் இருந்து பெண்ணின் உடலை மீட்டு எடுத்துள்ளனர். ஒரு பெண்ணை பாம்பு விழுங்கியது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை இந்தோனேசியாவில் மலைப்பாம்பு மனிதர்களை விழுங்குவது முதல் முறையல்ல. ஏற்கனவே 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் இது போன்று இரு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Indonesia, Python, Snake, Viral News