2017-இல் அமெரிக்க குடியுரிமை பெற்ற 50,802 இந்தியர்கள்

2017-இல் அமெரிக்க குடியுரிமை பெற்ற 50,802 இந்தியர்கள்
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: October 20, 2018, 10:03 PM IST
  • Share this:
கடந்த ஆண்டில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை சார்பில் அண்மையில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

2017-ம் ஆண்டில் அமெரிக்க குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 7,07,265.


2016-இல் இந்த எண்ணிக்கை 7,30,259-ஆக இருந்தது.

2017-இல் குடியுரிமை பெற்ற 7 லட்சம் பேரில், 1,18,559 பேர் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த எண்ணிக்கை அடிப்படையில் அந்த நாடு முதலிடத்திலுள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் சீனாவும் உள்ளன.

2017-இல் 50,802 இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். 2016-இல் இந்த எண்ணிக்கை 46,188-ஆகவும், 2015-இல் 42,213-ஆகவும் இருந்தது. பொதுவாக ஆண்களைக் காட்டிலும், பெண்கள்தான் அதிக அளவில் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.2017-இல் குடியுரிமை பெற்ற இந்தியர்களில் சுமார் 12,000 பேர் கலிஃபோர்னியாவிலும், சுமார் 5,900 பேர் நியூஜெர்சியிலும், சுமார் 3,700 பேர் டெக்சாஸிலும் குடியேறியுள்ளனர். இவ்வாறு அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
First published: October 20, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading