ஹோம் /நியூஸ் /உலகம் /

ஐநாவில் 'உய்கர்' இனமக்களுக்கு எதிரான சீன நடவடிக்கைகளை கண்டித்து 50 நாடுகள் கூட்டறிக்கை

ஐநாவில் 'உய்கர்' இனமக்களுக்கு எதிரான சீன நடவடிக்கைகளை கண்டித்து 50 நாடுகள் கூட்டறிக்கை

உய்கர் இனப்படுகொலை

உய்கர் இனப்படுகொலை

சீனக் கம்யூனிஸ்டுகள் டிசம்பர் 22, 1949 அன்று சுதந்திர கிழக்கு துர்கிஸ்தான் குடியரசைத் தூக்கியெறிந்துவிட்டு சீன காலனித்துவ ஆட்சியை பிரகடன படுத்தியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • chennai, India

ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா,  இங்கிலாந்து, உக்ரைன், கனடா உட்பட 50 நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையில் உய்கர் இனமக்களுக்கு எதிரான சீன நடவடிக்கைகளை கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 12, 1949 அன்று, சீன மக்கள் குடியரசின் கீழ் உள்ள மக்கள் விடுதலை இராணுவம் ஸேனா எல்லையில் அமைந்துள்ள கிழக்கு துர்கிஸ்தான் பகுதியில் இராணுவப் படையெடுப்பைத் தொடங்கியது. பல மாதங்களுக்குப் பிறகு, சீனக் கம்யூனிஸ்டுகள் டிசம்பர் 22, 1949 அன்று சுதந்திர கிழக்கு துர்கிஸ்தான் குடியரசைத் தூக்கியெறிந்துவிட்டு சீன காலனித்துவ ஆட்சியை பிரகடன படுத்தியது.

அப்போதிருந்து அங்கு வாழும் உய்குர், கசாக்ஸ், போன்ற பழங்குடியின மக்களை துன்புறுத்து படுகொலை செய்து வருகிறது. இதற்கு எதிராக அவ்வப்போது உலக அரங்கில் பேசப்பட்டாலும் சீனாவிற்கு எதிராக வலுவான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

150 குழந்தைகள் மரணம்: இந்தோனேசியாவின் 2 சிரப் நிறுவன லைசன்ஸ் ரத்து... காரணம் என்ன?

ஜூலை 6, 2020 அன்று, நாடுகடத்தப்பட்ட கிழக்கு துர்கிஸ்தான் அரசாங்கம் மற்றும் கிழக்கு துர்கிஸ்தான் தேசிய விழிப்புணர்வு இயக்கம் ஆகியவை உய்குர், கசாக்ஸ், கிர்கிஸ் மற்றும் பிற துருக்கிய மக்களின் இனப்படுகொலையை விசாரிக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் டு சட்டப்பூர்வ புகாரை தாக்கல் செய்தன.

அதுவும் பெரிதாக கண்டுகொள்ளப்படாத நிலையில் கிழக்கு துர்கிஸ்தானில் சீனாவின் அட்டூழியங்களை பகிரங்கமாக கண்டிக்கும் மாநிலங்களின் மிகப்பெரிய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்கு துர்கிஸ்தான் அரசு எக்ஸைல் (ETGE) குழு, கிழக்கு துருக்கிஸ்தான் தொடர்பான ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சீன அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் இந்த அக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஜின்ஜியாங்கில் உள்ள சுதந்திரத்தை இழந்த அனைத்து நபர்களையும் விடுவிப்பதற்கும், காணாமல் போன குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் மற்றும் இருப்பிடத்தை உடனடியாக தெளிவுபடுத்துவதற்கும், பாதுகாப்பான தொடர்பு மற்றும் மீண்டும் இணைவதற்கும் உடனடி நடவடிக்கை எடுப்பதும் இதில் அடங்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

புர்கா அணியலையா? வெளியே நில்லுங்க - கல்லூரி மாணவிகள் மீது கடுமைகாட்டும் தலிபான்கள்!

இதற்கிடையில், கிழக்கு துர்கிஸ்தானில் உய்குர்கள் மற்றும் பிற துருக்கிய மக்களுக்கு எதிராக சீனா மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை கண்டித்து இந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட்ட கனடா மற்றும் அனைத்து 50 நாடுகளுக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று எக்ஸைலில் உள்ள கிழக்கு துர்கிஸ்தான் அரசாங்கத்தின் பிரதமர் சாலிஹ் ஹுதாயார் கூறினார். உய்கர் இனத்தவர்களும் இந்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த கூட்டமைப்புக்கு எதிராக சீனாவுடன் 66 நாடுகள் இணைந்து கண்டனம் தெரிவித்தது. முஸ்லிம் நாடுகளே சீனாவிற்கு எதிராக நிற்பது அசிங்கம் என்று குற்றம் சாட்டியது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Attack on muslims, China, Condemns, United Nation