ஹோம் /நியூஸ் /உலகம் /

ஆப்கானிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு: 50 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு: 50 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு: 15 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு: 15 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் உள்ள ஷியா பகுதி மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

  இதைத்தொடர்ந்து, அந்நாட்டில் அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை காபூலில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, நேற்றைய தினம் ஆப்கானிஸ்தான் நாட்டில் கோஸ்ட் மாகாணத்தில் மதம் சார்ந்த ஒரு பள்ளிக்கூடத்தில் கையெறி குண்டு வெடிக்க செய்யப்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர்.

  இந்நிலையில், இன்று ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், குண்டு வெடிப்பில் காயம் அடைந்த 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  இந்த குண்டுவெடிப்புக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இதுபோன்று நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு தலிபான் அமைப்பின் எதிரி அமைப்பான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த காலத்தில் பொறுப்பேற்றிருந்தது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து நடைபெறும் மிகப் பெரிய வன்முறை இதுவாகும்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Afganistan, Taliban