அமெரிக்காவில் தீயணைப்பு வீரர்களுக்கு சிறுவன் அனுப்பிய அன்புப்பரிசு..

அமெரிக்காவில் தீயணைப்பு வீரர்களுக்கு சிறுவன் அனுப்பிய அன்புப்பரிசு..

தீயணைப்பு வீரர்கள், பேபி யோடா பொம்மையோடு புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர்

சிறுவன் அனுப்பிய பொம்மையை தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு எடுத்துச் சென்ற தீயணைப்பு வீரர்கள், அதனோடு புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர் .

  • News18
  • Last Updated :
  • Share this:
அமெரிக்காவில் தீயணைப்புப்படை வீரர்களுக்கு சிறுவன் ஒருவன் அனுப்பிய அன்புப் பரிசு வீரர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆரெகன் மாநிலத்தில் பற்றியுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடுவதைக் கண்ட கார்வர் என்னும் 5 வயது சிறுவன் அவர்களுக்கு ஏதேனும் பரிசளிக்க வேண்டுமென்று எண்ணினான்.

உடனடியாக ஒரு பேபி யோடா பொம்மையை வாங்கிய சிறுவன் தீயணைப்பு வீரர்களுக்கு அதனை அனுப்பி வைத்தான். "தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி. நீங்கள் தனிமையில் இருப்பதாக உணர்ந்தால் இதோ உங்களுக்காக ஒரு நண்பன்" என்று கார்வர் எழுதிய கடிதத்தோடு வந்த பேபி யோடா பொம்மையை கண்டு வீரர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.Also see... ரம்யமாய் காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன் - நியூ போட்டோஸ்

சிறுவன் அனுப்பிய பொம்மையை தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு எடுத்துச் சென்ற தீயணைப்பு வீரர்கள், அதனோடு புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர் .
Published by:Vinothini Aandisamy
First published: