Home /News /international /

ரஷ்யா - உக்ரைன் போரில் இந்தியா மிகவும் எச்சரிக்கையாக நடப்பதற்கான 5 காரணங்கள்

ரஷ்யா - உக்ரைன் போரில் இந்தியா மிகவும் எச்சரிக்கையாக நடப்பதற்கான 5 காரணங்கள்


ரஷ்யா - உக்ரைன்

ரஷ்யா - உக்ரைன்

தற்பொழுது உக்ரைன் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலில் இந்தியாவுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் போது, எந்த நாட்டுக்கு ஆதரவாக இருப்பது என்பது மிகவும் நெருக்கடியான சூழலை ஏற்படுத்தும். பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகவும், பல நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவு என்றும் கூறு வருகின்றது. இந்தியாவைப் பொறுத்தவரை, உக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்ததை அடுத்து, ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை ஒரே வாரத்தில் இரண்டு இந்தியா புறக்கணித்துள்ளது. கடந்த ஞாயிறு, ரஷ்யாவின் தீவிரமான நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா பொதுசபையின் அவசர கால சிறப்பு கூட்டத்திலும் இந்தியா பங்கேற்கவில்லை.

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை இந்தியா எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறது, ஏன் ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானத்தில் இந்தியா பங்கெடுக்கவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அதே நேரத்தில், பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ மற்றும் கீவ் எடுத்த முடிவை புதுடெல்லி வரவேற்றுள்ளது.

உக்ரைன் ரஷ்யா போரில், ஏன் இந்தியா மிகவும் எச்சரிக்கையா நடந்து கொள்கிறது என்பதற்கான 5 காரணங்கள்:

தற்பொழுது உக்ரைன் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலில் இந்தியாவுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா பல ஆண்டுகளாக இந்தியாவுடன் நட்பாக இருக்கும் நாடு. அது மட்டுமின்றி இந்தியாவிற்கு மேற்கில் இருக்கும் நட்பு நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. எனவே, உக்ரைன் மீதான ரஷ்ய நாட்டின் படையெடுப்பு, இந்தியாவுக்கும் கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு சூழலைத்தான் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ராணுவ மற்றும் பாதுகாப்பு ஆயுதங்களை விநியோகம் செய்யும் நாடு ரஷ்யா. அது மட்டுமின்றி, இந்தியாவிற்கு பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலையும் வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள் : ரஷ்யா - உக்ரைன் பிரச்னைக்கு என்ன தீர்வு? ஐநாவில் இந்தியா விளக்கம்

இந்தியாவில் இயங்கும் 272 Su 30 ரக போர்விமானங்கள் அனைத்துமே ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும். மேலும், இது வரை ரஷ்ய நாட்டில் தயாரிக்கப்பட்ட கிலோ கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல்களையும், 1,300 க்கும் மேற்பட்ட ரஷ்ய t-90 டாங்கிகளையும் ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளது.

இந்தியாவுக்கு அமெரிக்காவிடமிருந்து ஒரு பக்கம் கடுமையான நெருக்கடி இருந்தாலும் நேரடியாக யாருக்கும் ஆதரவு தெரிவிக்க முடியாத சூழல் இருக்கிறது. ரஷ்யாவின் அதிநவீன தொலைதூர ஏவுகணை அமைப்பான S-400 ஏர் மிசைல் சிஸ்டம் வாங்க வேண்டும் என்ற முடிவில் இந்தியா மிக உறுதியாக உள்ளது. அது மட்டுமின்றி,ஏர் மிசைல் வாங்குவதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டில், ரஷ்யாவுடன் 5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.

இதையும் படியுங்கள் : ரயில்களில் மீண்டும் வருகிறது முன்பதிவில்லா பெட்டிகள் சேவை... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் அனைத்து விஷயங்களிலும், இந்தியாவுக்கு ரஷ்யா துணையாக இருந்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழனன்று, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரான அந்தோனி ஃபிளிங்கென், நாட்டின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் பேசுகையில், உக்ரைன் மீது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை “முன்கூட்டி திட்டமிடப்பட்ட, தூண்டப்படாத மற்றும் நியாயமற்ற தாக்குதல்” என்று அமெரிக்கா கூறியதை ஒருங்கிணைந்து அனைவரும் கண்டிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இதையும் படியுங்கள் : இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது... 24 மணிநேரத்தில் 180 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும்படி, இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா இந்தியாவின் மீது அழுத்தம் கொடுத்து வருகிறது. நியூ டெல்லி மற்றும் சீனாவுக்கு இடையில் ஏற்பட்ட பெரிய பிரச்சினைகளின் போது அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவாக செயல்பட்டது. அது மட்டுமின்றி ஐக்கிய நாடுகளின் சபையில் ஃபிரான்ஸ் இந்தியாவின் முக்கியமான நட்பு நாடாக இருந்தது. இந்தியாவை பொறுத்தவரை பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் டெக்னாலஜி ஆகிய மூன்று துறைகளிலுமேயே அமெரிக்கா ஒரு முக்கிய பார்ட்நாராக செயல்பட்டு வருகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி