சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,000 நெருங்கி வரும் நிலையில் அங்குள்ள 4800 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் நெரிசல் மிகுந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான தங்குமிடங்களில் வசிப்பவர்கள். சிங்கப்பூரின் பாதிப்பு எண்ணிக்கையில் 25 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றாலும் அவர்களுக்கு நோயின் தாக்கம் குறைவாகவே இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனால் சிகிச்சைக்குப் பின் அவர்களது உடல்நலம் தேறிவருகிறது. சிங்கப்பூரில் 18,778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவரை 18 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 0.1 சதவீதம் என்ற அளவிலேயே கட்டுக்குள் உள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.