ஜப்பான் தேர்தலில் போட்டியிட்டு வென்ற முதல் இந்தியர்!

ஜப்பானில் சுமார் 34 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அதாவது, ஜப்பான் மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினர் இந்தியர்கள்.

Web Desk | news18
Updated: April 25, 2019, 1:43 PM IST
ஜப்பான் தேர்தலில் போட்டியிட்டு வென்ற முதல் இந்தியர்!
யோகி. Image Credits: Twitter/@yogi3677
Web Desk | news18
Updated: April 25, 2019, 1:43 PM IST
ஜப்பான் நாட்டில் முதன் முறையாக இந்தியர் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு அதில் வென்றுள்ளார்.

புரானிக் யோகேந்திரா என்ற இந்த 41 வயது நபர் இந்தியாவின் புனே நகரைச் சேர்ந்தவர். கடந்த ஏப்ரல் 21-ம் தேதி நடந்த வார்டு தேர்தலில் டோக்யோ நகரின் எடோகவா வார்டில் போட்டியிட்டு வென்றுள்ளார் யோகேந்திரா. ஜப்பானின் இந்த உள்ளூர் தேர்தலில் ஜப்பானின் அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட யோகேந்திரா என்ற யோகி தான் ஜப்பான் அரசியல் வரலாற்றில் நுழையும் முதல் இந்தியர்.

யோகி இந்தியாவிலிருந்து கடந்த 1997-ம் ஆண்டு மேற்படிப்புக்காக ஜப்பான் சென்றார். இரண்டு ஆண்டுகள் படிப்பை நிறைவு செய்து இந்தியா திரும்பிய யோகி மீண்டும் 2001-ம் ஆண்டு ஜப்பானில் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். ஜப்பானின் எடோகவா பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் யோகி ஜப்பானின் 2011-ம் ஆண்டு சுனாமி மற்றும் பூகம்பத்தின் சமயங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று முகாம் அமைத்து உதவி செய்துள்ளார்.

அந்த சமயத்தில் ஜப்பானுடன் தனக்கு ஏற்பட்ட உணர்வாலும் மக்களின் அன்பாலும் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தவர், தற்போது அந்த வார்டில் போட்டியிட்டு சட்டசபைக்குத் தேர்வாகியுள்ளார். ஜப்பானில் சுமார் 34 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அதாவது, ஜப்பான் மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினர் இந்தியர்கள். குறிப்பாக, எடோகவாவில் மட்டும் சுமார் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: EXCLUSIVE | இலங்கை தாக்குதல் தொடர்பான விசாரணையில் இந்தியா உதவி
First published: April 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...